புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை இணை இருப்பிட ஊழல் வழக்கில் (கோ-லொகேஷன் ஊழல்) சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்ரா டெல்லியில் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவர் சிபிஐ தலைமையகத்தில் லாக்கப்பில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மூன்று நாட்களாக சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை செய்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தியது. எனினும் இந்த விசாரணைகலில் அவர் சரியான பதில்களை அளிக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.
சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த, மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் மூத்த உளவியலாளர் ஒருவரின் சேவையையும் மத்திய புலனாய்வு நிறுவனம் பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.
உளவியலாளரின் விசாரணைக்கும் அவர் பதிலளிக்காமல் போகவே, வேறு வழியின்றி ஏஜென்சி அவரை கைது செய்ய வேண்டியதாயிற்று என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக சனிக்கிழமையன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவரது முன் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த பங்குத் தரகருக்கு எதிராக 2018 முதல் இணை இருப்பிட ஊழலை விசாரித்து வந்த சிபிஐ, என்எஸ்இயின் அப்போதைய உயர்மட்ட அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் செபி அறிக்கைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | இமாலய சாமியாருக்கு இந்திய பங்குச்சந்தைக்கும் என்ன தொடர்பு? பெரிதாகும் விவகாரம்
சித்ரா ராம்கிருஷ்ணாவின் செயல்களுக்கு வழிகாட்டும் ஒரு மர்மமான யோகியைப் பற்றி குறிப்பிடப்பட்ட செபி அறிக்கையில் வெளிவந்த புதிய உண்மைகளைத் தொடர்ந்து சிபிஐ தனது விசாரணையை விரிவாக்கியது. இந்த விசாரணையின் ஒரு கட்டமாக பிப்ரவரி 25 அன்று, சிபிஐ, என்எஸ்இ-ன் முன்னாள் குழும இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்தது.
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) பிப்ரவரி 11 அன்று சித்ரா ராம்கிருஷ்ணா மற்றும் பிறர் மீது சுப்பிரமணியன் தலைமை வியூக ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் குழு இயக்க அதிகாரி மற்றும் எம்.டி.யின் ஆலோசகராக அவரை மீண்டும் நியமித்ததாகக் குற்றம் சாட்டியது.
தடயவியல் தணிக்கையில் சுப்பிரமணியன் "யோகி" என்று குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் செபி தனது இறுதி அறிக்கையில் இந்த கூற்றை நிராகரித்துவிட்டது.
2013 இல் முன்னாள் சிஇஓ ரவி நரேனுக்குப் பிறகு பொறுப்பேற்ற சித்ரா ராமகிருஷ்ணா, சுப்பிரமணியனை தனது ஆலோசகராக நியமித்தார். பின்னர் அவர் குழு இயக்க அதிகாரியாக (GOO) உயர்த்தப்பட்டார்.
சுப்ரமணியனின் சர்ச்சைக்குரிய நியமனம் மற்றும் அவரது அடுத்தடுத்த பதவி உயர்வு ஆகியவற்றிலும், முக்கியமான முடிவுகளிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சித்ரா வழிநடத்தப்பட்டார். அந்த நபர் இமயமலையில் வசிப்பதாக சித்ரா ராமகிருஷ்ணா கூறினார். செபி-ஆணையிடப்பட்ட தணிக்கையின் போது சித்ரா ராமகிருஷ்ணாவின் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் பற்றிய ஆய்வு இந்த தகவல்களைக் காட்டுகிறது.
சித்ரா ராம்கிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், என்எஸ், என்எஸ்இ முன்னாள் எம்டியும் சிஇஓவுமான ரவி நரேன் சுப்ரமணியனுக்கு தலா ரூ.2 கோடியும், தலைமை ஒழுங்குமுறை அதிகாரி மற்றும் இணக்க அதிகாரியாக இருந்த வி ஆர் நரசிம்மனுக்கு ரூ.6 லட்சமும் செபி அபராதமாக விதித்துள்ளது.
மேலும் படிக்க | ஆனந்த் சுப்பிரமணியன் கைது: மிகப்பெரிய என்எஸ்இ மோசடியில் சிக்கிய இவர் யார்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR