நான் களத்தில் இருந்து நேருக்கு நேர் போரடுபவன் - பாஜகவை விளாசிய உத்தவ் தாக்கரே

நான் வெற்று நிலத்தில் வாள் எடுப்பவர்களில் ஒருவன் அல்ல.. எதிரிகளை நேரடியாக எதிர்கொள்பவர்களில் நானும் ஒருவன் என பாஜகவை கடுமையாக தாக்கிய உத்தவ் தாக்கரே

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2019, 07:55 PM IST
நான் களத்தில் இருந்து நேருக்கு நேர் போரடுபவன் - பாஜகவை விளாசிய உத்தவ் தாக்கரே title=

மும்பை: 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 145 எண்ணிக்கையை விட அதிகமான 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான "மகா விகாஸ் அகாதி" அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றது. அதே நேரத்தில், சிவசேனா தலைவர் தாக்கரே எதிர்க்கட்சியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அதாவது இன்று பாஜக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அதை மேற்க்கோள் காட்டி, "நான் நேருக்கு நேர் நின்று போராட்டக்கூடியவன். ஆனால் எதிர்க்கட்சிகளின் நிலையை பார்த்து, அவர்கள் எப்படி என்று உணர்ந்துக்கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

பாஜக-வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது அமைச்சர்கள் ஆகியோரின் சத்தியப்பிரமாணம் சட்டவிரோதமானது என்றும், அதே நேரத்தில் சபையின் நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் வந்தே மாதரம் பாடப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே, “எங்கள் மகாராஷ்டிரா சிவாஜி மகாராஜின் மகாராஷ்டிரா. எங்களுக்கு சிவாஜி தேவ் தான் முக்கியம். இந்த முழு நாடும் நம்முடையது. இந்த கடவுள் பிறந்த மண்ணின் பக்தர்கள் நாங்கள். சிவாஜியின் பக்தர் எனக் கூறினார்.

நான் முதல் முறையாக சபைக்கு வந்தேன். அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. சட்டசபை என்ற வீட்டிற்கு வருவதற்கு முன்பு, எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. எப்படி நடந்து கொள்வது என்று,  ஏனென்றால் நான் ஒரு சாதாரண மனிதன், இங்குள்ள சட்டப் பணிகளில் அனுபவம் இல்லாதவன். ஆனால் இங்கு வந்த பிறகு தான், வெளி மைதானத்தை விட உள்ளே நன்றாக இருப்பது தெரிந்தது.  நான் இன்று என் முன்னால் உள்ள வெற்று மேஜை நாற்காலிகளுடன் விவாதம் பண்ண மாட்டேன், ஏனென்றால் நான் வெற்று நிலத்தில் வாள் எடுப்பவர்களில் ஒருவன் அல்ல. நான் நேருக்கு நேர் பேசக்கூடிய நபர். எதிரிகளை நேரடியாக எதிர்கொள்பவர்களில் நானும் ஒருவன். இப்போது என் எதிரில் எதிரிகள் இல்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியல் எதிரிகள் உள்ளனர் எனக் கூறினார்.

மேலும் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "எங்கள் பேச்சுகளில் மட்டுமே சிவாஜி, ஷாஹு, அம்பேத்கர், பூலே தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க வேண்டம். ஆனால் அவர்களின் பெயரில் சத்திய பிரமாணம் செய்தால், அது ஏன் உங்களுக்கு இவ்வளவு வழிக்கிறது? சிவாஜி மகாராஜ் மற்றும் எனது பெற்றோரின் பெயரில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன். அதேபோல மீண்டும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்வேன். இது ஒரு குற்றம் என்றால், நான் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் செய்வேன். தன் கடவுளையும் பெற்றோரையும் நம்பாதவன் மகனாக வாழ உரிமை இல்லை என ஆவேசமாக பேசினார்.

எதிர்கட்சிக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருந்தால், அதை முன்வைக்க வழிகள் உள்ளன. ஆனால் அதை தவிர்த்துவிட்டு, தேவையற்ற விவாதத்தை பேசுவது தவறு. அது மகாராஷ்டிராவின் கலாச்சாரம் அல்ல என எதிர்கட்சியான பாஜகவுக்கு அறிவுரை கூறினார்.

இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பாரதீய ஜனதா (BJP) கட்சியின் 105 எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற ஆதரவாளர்கள் சபையின் நடவடிக்கைகளை புறக்கணித்தனர். அவர்கள் சபையிலிருந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News