சுதந்திர தினமான இன்று பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்

பிதமர் மோடி அவர்களே.. நாட்டு மக்கள் அச்சே தின்காக இல்லை, சச்சா தின்காக காத்திருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2018, 05:33 PM IST
சுதந்திர தினமான இன்று பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் title=

டெல்லி: இன்று நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்பொழுது பிரதமர் மோடி அவர்கள் கூறியதாவது:- 

இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேசம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக பொருளாதார வலிமையான நாடுகளில் 6 வது இடத்தை நமது நாடு அடைந்துள்ளது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு தலை வணங்குகிறேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை அரசு மீட்டுள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். புதிய இந்தியா வேண்டும் என 2014 ல் மக்கள் நம்மை தேர்ந்தெடுத்த்கார்கள், அனைவருக்குமான இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பை கொண்டு வந்ததன் மூல நான் பெருமிதம் கொள்கிறேன், ஜிஎஸ்டி மூலம் வர்த்தக, தொழில் துறைகளின் அபாயகரமான பிரச்சனைகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் ஆபத்து நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் நாட்டை பெருமை அடையச் செய்துள்ளனர். கடைசியாக மூன்று முறை ஜெய் ஹிந்த் மற்றும் வந்தே மாத்திரம் என்று கோஷமிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை அடுத்து, இதுக்ககுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் 72 வது சுதந்திர தின உரையில், முக்கிய பிரச்சனைகளான ராகேல் மற்றும் வியாப்பாம், சத்தீஸ்கர் மாநிலத்தின் PDS ஊழல் மற்றும் டோக்லாமில் சீன ஆக்கிரமிப்பு ஆகியவற்றை பற்றி பேசவே இல்லை என விமர்சித்த்துள்ளது. 

பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர உரை இதுதான். ராபர்ட் மற்றும் வியாப்பாம், சத்தீஸ்கர், சி.டி.எஸ்.எஸ் ஊழல், டோக்ளாமில் உள்ள சீன ஆக்கிரமிப்பு மற்றும் நாட்டின் பல பிசச்சனைகளை பற்றி அவர் பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரண்டீப் சூர்ஜுவலா தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடியால் மனசு இருப்பதை பேச முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் நாட்டின் நலனை பற்றியாவது பேசி இருக்க வேண்டும். ஏனென்றால் இனிமேல் நல்லநாள் ("அச்சே தின்") வராது. உண்மையான நாளுக்காக ("சச்சா தின்") தான் காத்திரிக்கிறோம். அந்த உண்மையான நாள் எப்போ வரும் என்றால், பிரதமர் மோடி எப்போ இங்கிருந்து போவாரோ!!. என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

Trending News