உச்சநீதிமன்றத்தின் முன்னிலையில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது.
70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 உறுப்பினர்களும் பாஜகவுக்கு 28 உறுப்பினர்களும் மற்றும் முற்போக்கு ஜனநாயக 6 உறுப்பினர்களும் உள்ளனர்.
ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போன மாதம் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டன. இதனை அடுத்து அவர்களை சபாநாயகர் கோவிந்த் சிங் தகுதி நீக்கம் செய்தார்.
இதனால் பெரும்பான்மையை ஹரிஷ் ராவத் இழந்ததாக எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கே.கே.பாலையிடம் முறையிட்டனர். கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்பே அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனையடித்து சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இதற்கான அதிகாரப்பூர்வமாக உத்தரவு வரும் மே11ம் தேதி அறிவிக்கப்படும்.
நேற்று தடைநீக்கம் விதிக்கப்பட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற 61எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டனர். இன்று சுப்ரீம்கோர்ட்டில் உரை திறக்கப்பட்டது.
அதில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 61 பேர் கொண்ட சட்டசபையில் 33 வாக்குகள் கிடைத்ததாகவும் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் சுப்ரீம்கோர்ட் கூறியது.
காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி மற்றும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சி உத்தரகண்ட் மாநிலத்தில் ரத்து செய்யப்பட்டும்.