மும்பை: திங்களன்று, மும்பையில் உள்ள ஜே.ஜே. மார்க் காவல் நிலையத்தின் 6 துணை ஆய்வாளர்கள் உட்பட 12 போலீஸ் அதிகரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மூத்த காவல் அதிகாரிகள் வழங்கினர். இதுக்குறித்து தகவல் அளித்த ஒரு அதிகாரி, இந்த 12 போலீஸ்காரர்களில் எட்டு பேருக்கு நோயின் அறிகுறிகளைக் காட்டவில்லை என்று கூறினார்.
அவர்களுடன் தொடர்பு கொண்ட 40 பேர் முன்னெச்சரிக்கையாக தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். உதவி போலீஸ் கமிஷனர் கூறுகையில், "இந்த போலீஸ்காரர்களுக்கு திங்கள்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் துணை ஆய்வாளர்கள். இந்த 12 போலீஸ்காரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் தொடர்பு கொண்ட 40 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஜே.ஜே. மார்க் காவல் நிலையம் அரசு ஜெ. மருத்துவமனை அருகிலேயே உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பைதுனி காவல் நிலையத்தின் ஆறு போலீஸ்காரர்களிலும், நாக்பாடாவில் மூன்று பேரும், மஹிம் காவல் நிலையத்தில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிராவில், இதுவரை நான்கு போலீசார் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில், கடந்த 24 மணி நேரத்தில் 771 கொரோனா நேர்மறையான தொற்று பதிவாகியுள்ளன. மேலும் 35 பேர் இறந்துள்ளனர். இப்போது மகாராஷ்டிராவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 14,541 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொரோனாவிலிருந்து இதுவரை மாநிலத்தில் 583 பேர் இறந்துள்ளனர்.
நேற்றும் தொடர்ந்து நான்காவது நாளாக, கொரோனா வைரஸ் தொற்று புதிய சாதனை படைத்து வருகிறது. திங்களன்று, நாடு முழுவதும் 2900 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. இது ஒரு நாளில் வைரஸ் தொற்றின் அதிக எண்ணிக்கையிலான சாதனையாகும். இதன் மூலம், இப்போது நாட்டில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரம் 356 ஐ எட்டியுள்ளது.