COVID-19 எதிரொலி: பொது போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு..!

முதல் மூன்று கிலோமீட்டர்களுக்கான குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.5 முதல் ரூ.7 வரை உயர்த்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது..!

Last Updated : Jul 21, 2020, 01:39 PM IST
COVID-19 எதிரொலி: பொது போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு..! title=

முதல் மூன்று கிலோமீட்டர்களுக்கான குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.5 முதல் ரூ.7 வரை உயர்த்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது..!

கோவிட் -19 தொற்றுக்கு மத்தியில், மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. எனவே, அரசாங்கங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் பொது போக்குவரத்தின் கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. நிதி பற்றாக்குறையை சமாளிக்க, பஸ் கட்டணத்தை 25 சதவீதம் அதிகரிக்க இமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

ம.பி., முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் ஜூலை 20 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மலைப்பாங்கான மற்றும் சமவெளிகளுக்கு 3 கி.மீ.க்கு மேல் பயணம் செய்வதற்கான ஒரு கிலோமீட்டர் கட்டண திட்டத்தை அதிகரிக்க முடிவு செய்தது. முதல் 3 கிலோமீட்டருக்கு கட்டணம் 5 ரூபாய்க்கு பதிலாக 7 ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு இமாச்சல சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

மேலும், நூலகத்தை நடத்துவதற்கு, கல்வித் துறையில் காலியாக உள்ள 771 உதவி நூலகர் பதவிகளை ஜூனியர் அலுவலக உதவியாளராக (நூலகம்) மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read | Viral: கொரோனாவிலிருந்து குணமடைந்த அக்காவை ஆடிப்பாடி வரவேற்ற தங்கை!!

விமானத்தின் கட்டணத்தையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று கூறப்படுகிறது. விமானங்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.6,000. விமான கட்டணங்களுக்கான முதல் குழுவில் 40 நிமிடங்களுக்கும் குறைவான விமானங்களைக் கொண்டிருக்கும். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குழுவின் விமானங்கள் முறையே 40-60 நிமிடங்கள், 60–90 நிமிடங்கள், 90–120 நிமிடங்கள் மற்றும் 120–150 நிமிடங்கள் ஆகும்.

DGCA படி, 40 முதல் 60 நிமிடங்கள், 60 முதல் 90 நிமிடங்கள், 90 முதல் 120 நிமிடங்கள், 120 முதல் 150 நிமிடங்கள், 150 முதல் 180 நிமிடங்கள் மற்றும் 180-280 நிமிடங்கள் வரையிலான விமானங்களுக்கான கட்டண வரம்பு ரூ .2,500-7,500, ரூ .3,000 முதல் 9,000 வரை, 3,500 முதல் 10,000 ரூபாய், 4,500 முதல் 13,000 ரூபாய், 5,500 முதல் 15,700 ரூபாய் மற்றும் 6,500 முதல் 18,600 ரூபாய் வரை நிர்ணயிக்கபட்டுள்ளது.

Trending News