உலகளவில் COVID-19 பாதிப்பு நிலவரம் மற்றும் பட்டியல்: உலகளவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: 10,001,527; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 499,124; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,065,869
உலகளவில் COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.
இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துவிட்டது. இறப்பு எண்ணிக்கை 16,475ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் நோய்த்தொற்று அதிகரித்ததால் குறைந்தது 12 மாகாணங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,210 ஆகப் பதிவாகியுள்ளது.
மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் அணிவது அவசியம் என்று இரான் உத்தரவிட்டுள்ளது.
Also Read | கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிப்பு
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா - 25,48,996
2. பிரேசில் - 13,44,143
3. ரஷ்யா - 6,33,563
4. இந்தியா - 5,48,318
5. இங்கிலாந்து - 3,12,640
6. பெரு - 2,79,419
7. சிலி - 2,71,982
8. ஸ்பெயின் - 2,48,770
9.இத்தாலி - 2,40,310
10. இரான் - 2,22,669
Also Read | தண்ணீருக்குள் தன்னை மறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் புகைப்படங்கள்
கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மட்டுப்படாத நிலையில், உலக சுகாதார நிறுவனம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். COVID-19 பரவுவதைத் தடுக்க உதவும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வருகிறது.
வீட்டிலேயே இருப்பது பற்றி உங்கள் உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைக் கேளுங்கள்
கண்டிப்பாக மற்றவர்களுடன் கூடியிருக்க வேண்டுமானால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும்
மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருங்கள்
கைகளை அடிக்கடிச் சுத்தம்செய்து, வீட்டில் அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்
உங்கள் கண்களையோ, மூக்கையோ, வாயையோ தொட வேண்டாம்.
Also Read | தப்லிகி ஜமாத் தலைவருக்கும் தாஹிர் உசேனுக்குமான தொடர்பு உண்மை: அமலாக்கத் துறை
இருமல், தும்மல் வந்தால் உங்கள் முழங்கையையோ டிஷ்யூவையோ கொண்டு மறைக்கவும்.
வெளியே செல்லும்போது நோய் தொற்றும் அபாயத்தைக் குறைக்கவும்.
கண்டிப்பாக மற்றவர்களை சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால், காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும்.
மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை அதாவது தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியமானது.
வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்
நமது நாட்டின் முன்னணி வீரர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அளப்பறிய அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளனர்.
கொரோனா வாரியர்ஸ் வீரர்களுக்கு நன்றியையும் அன்பான வாழ்த்துக்களைக் காண்பித்து அவர்களுடைய கடின உழைப்பை மதிப்போம் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.