கொரோனா வைரசுக்கு இதுதான் மருந்து! சட்டசபையை உலுக்கிய பாஜக எம்.எல்.ஏ

கொரோனா வைரசை குணப்படுத்த அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கொடுத்த மருத்துவ டிப்ஸ்-ல் ஏற்பட்ட  சர்ச்சை.   

Updated: Mar 3, 2020, 10:08 AM IST
கொரோனா வைரசுக்கு இதுதான் மருந்து! சட்டசபையை உலுக்கிய பாஜக எம்.எல்.ஏ

உலகளவில் இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொடிய கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க முழு உலகமும் தடுமாறிக்கொண்டிருக்கையில், பசுவின் சிறுநீரும், சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தும் என்று கூறிய பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளோ, குணப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வைரசை பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் குணப்படுத்தலாம் என அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியுள்ளார். நேற்று அசாமில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், அவர் இந்த கருத்தை அங்கு தெரிவிதார். 

"பசு சாணம் மிகுந்த பயனுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப்போல பசுவின் சிறுநீர் தெளித்தால், அந்த பகுதியே சுத்தமாகிறது. அதே முறையில் பசுவின் சாணமும், சிறுநீரையும் கொண்டு கொரோனா வைரசையும் குணப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தது பெரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.