ஃபானி புயல்: மம்தா பானர்ஜி பிரசாரங்கள் 2 நாட்கள் ரத்து

ஃபானி புயல் காரணமாக மம்தா பானர்ஜி கலந்துக் கொள்ளவிருந்த பிரசாரங்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Last Updated : May 3, 2019, 02:55 PM IST
ஃபானி புயல்: மம்தா பானர்ஜி பிரசாரங்கள் 2 நாட்கள் ரத்து title=

ஃபானி புயல் காரணமாக மம்தா பானர்ஜி கலந்துக் கொள்ளவிருந்த பிரசாரங்கள் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்தபாலி இடையே ஃபானி புயல் சற்று முன்  கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்தபோது ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11,18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இதனையடுத்து முக்கிய தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது ஃபானி புயல் மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்வதால் மம்தாவின் அனைத்து பிரசாரக்கூட்டங்களும் இன்றும், நாளையும்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News