அட, அந்த group admin-னே அவங்கதாங்க: Deepika-வின் ரகசியத்தை போட்டுடைத்த கரிஷ்மா!!

விசாரணையின் போது கரிஷ்மா NCB அதிகாரிகளிடம், தீபிகா போதைப்பொருள் தொடர்பான WhatsApp Group-ன் Admin-ஆக இருந்தார் என்று கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2020, 05:43 PM IST
  • போதைப் பொருட்கள் குறித்த ஒரு WhatsApp Group-ஐ தீபிகா கையாண்டு வந்துள்ளார்.
  • பல பிரபலங்களின் மீது NCB தன் பிடியை இறுக்கியுள்ளது.
  • இன்னும் சில பெயர்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட, அந்த group admin-னே அவங்கதாங்க: Deepika-வின் ரகசியத்தை போட்டுடைத்த கரிஷ்மா!! title=

புதுடெல்லி: KWAN திறமை மேலாண்மை நிறுவன ஊழியர் கரிஷ்மா பிரகாஷ் (Karishma Prakash) போதைப்பொருள் பணியக கட்டுப்பாட்டு அமைப்புக்கு (NCB) அளித்த அதிர்ச்சி வாக்குமூலத்தில், நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) போதைப் பொருட்கள் குறித்த ஒரு WhatsApp Group-ஐ கையாண்டு வந்ததாக கூறியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, விசாரணையின் போது கரிஷ்மா NCB அதிகாரிகளிடம், தீபிகா போதைப்பொருள் தொடர்பான WhatsApp Group-ன் Admin-ஆக இருந்தார் என்று கூறியுள்ளார். இந்த சாட் குரூப்பில் ஜெயா சஹா, கரிஷ்மா பிரகாஷ், தீபிகா படுகோன் உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே இருந்தனர்.

போதை மருந்துகள் குறித்த இந்த WhatsApp Group-ன் சாட்டுகள் 2017 க்கு முந்தையவை.

இதற்கிடையில், இன்று, நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் (Rakul Preet Singh) ரியா சக்ரவர்த்தி தொடர்பான போதைப் பொருள் chat-களை ஒப்புக்கொண்டார்.

ALSO READ: Deepika Padukone க்கு எதிரான நடவடிக்கை என்னவாக இருக்கும்....?

தீபிகா மற்றும் கரிஷ்மா இடையிலான WhatsApp Group Chat குறிப்புகள் மீட்டெடுக்கப்பட்ட பின்னர் தீபிகாவின் பெயர் இந்த வழக்கில் வெளிப்பட்டது. இதில் தீபிகா ‘ஹாஷ்’ போதைப் பொருளை கேட்பது தெரிய வந்துள்ளது. அதன்பிறகு, KWAN திறமை மேலாண்மை நிறுவனத்தின் ஊழியர் ஜெயா சஹாவின் chat-களும் வெளிவந்தன. அவர் விசாரிக்கப்பட்ட போது, ஷ்ரத்தா கபூர், மது மந்தேனா மற்றும் ஒரு சிலருக்கு CBD Oil போதைப் பொருளை ஏற்பாடு செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த பிரபலங்கள் மீது NCB தன் பிடியை இறுக்கியுள்ளது. இந்த வழக்கில் இன்னும் சில பெயர்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 26 ம் தேதி, தீபிகாவைத் தவிர, சாரா அலிகான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) மரணம் தொடர்பாக NCB தற்போது விசாரணை நடத்தி வருகிறது, அவர் ஜூன் 14, 2020 அன்று தனது பாந்த்ரா இல்லத்தில் இறந்து கிடந்தார்.

ALSO READ: போதைப்பொருள் உரையாடலின் போது கசிந்த தீபிகா படுகோனின் பெயர்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News