அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று அபிநந்தனை சந்தித்து நலம் விசாரித்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2019, 05:43 PM IST
அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் title=

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் எப்16 விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது இந்தியா. அப்பொழுது ஏற்ப்பட்ட விபத்தில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.

இந்தியா கொடுத்த தொடர்ந்து அழுத்தத்தால் இரண்டு நாள் கழித்து நேற்று விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று இரவு 9.17 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் இருந்து இந்திய அதிகாரிகளுடன் வெளியேறிய அபிநந்தன். அங்கிருந்து அம்ரித்சரஸ் சென்று விமானம் மூலம் மூலம் டெல்லி வந்தடைவார். நாடு முழுவதும் உள்ள மக்கள் அவரது வருகையை கொண்டாடினர்.

இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவமனைக்கு சென்று அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Trending News