பீரங்கித் துப்பாக்கிகள், சுய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!
101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியா பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 9) பாதுகாப்பு அமைச்சகம் "ஆத்மா நிர்பர் பாரத்" முயற்சியைத் தழுவுவதற்கும் 101 ஆயுதங்களுக்கான இறக்குமதி தடையை அறிமுகப்படுத்துவதற்கும் அறிவித்துள்ளது.
"இறக்குமதி மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம், இதனால் அவர்கள் உள்நாட்டுமயமாக்கலின் இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உள்ளனர்" என்று சிங் ட்வீட் செய்துள்ளார்.
The embargo on imports is planned to be progressively implemented between 2020 to 2024. Our aim is to apprise the Indian defence industry about the anticipated requirements of the Armed Forces so that they are better prepared to realise the goal of indigenisation.
— Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020
தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் எளிமையான பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.எச்., ரேடார்கள் மற்றும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சிங் தெரிவித்துள்ளார்.
ALSO READ | நாடு தழுவிய வேலைநிறுத்தில் 10 தொழிற்சங்கள், வீட்டை விட்டு கவனமாக வெளியேறுங்கள்
இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101 தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
All necessary steps would be taken to ensure that timelines for production of equipment as per the Negative Import List are met, which will include a co-ordinated mechanism for hand holding of the industry by the Defence Services.
— Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020
பாதுகாப்பு துறை என்பது நாட்டில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ஒன்று. ராணுவம், விமானப்படை, கப்பற்படை என்று பல்வேறு விதமான உட்கட்டமைப்பு வசதிகள் என பல லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 101 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதில் இந்தியாவில் உற்பத்தி செய்தால், ஒரு பக்கம் அன்னியச் செலாவணியில் மிச்சப்படும். இன்னொருவர் இந்திய நிறுவனங்களுக்கு புதிதாக தொழில் வாய்ப்பு அதன் மூலம் வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்படும் ஆகவே தான் இந்த முடிவை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார்.