வாஷிங்டன்: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறவது:-
ஊழலை ஒழிக்க ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என நம்புகிறோம். ஊழல் ஒழிப்பிற்கு இது முக்கியமான நடவடிக்கை என்று நான் கருதுகிறேன், மேலும் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழுக்க முடியும். இது ஒரு முக்கியமான மற்றும் தேவையான நடவடிக்கை ஆகும்.
இந்தியர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க மக்களுக்கும் இந்த அறிவிப்பால் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை ஒன்றை, அமெரிக்க தூதரகம் மூலமாக இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ளோம்" என்றார்.