டெல்லி பனிமூட்டம்- 26 ரயில் தாமதம்; விமான சேவை பாதிப்பு

டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது

Last Updated : Dec 18, 2016, 12:31 PM IST
டெல்லி பனிமூட்டம்- 26 ரயில் தாமதம்; விமான சேவை பாதிப்பு title=

புதுடெல்லி: டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட  பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் இன்று 26 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் பனி சூழ்ந்ததால் 5 சர்வதேச விமானங்கள் மற்றும் 3 உள்நாட்டு விமானங்கள் இன்று டெல்லியில் புறப்படதாமதமானது. 

டெல்லியில் காலை வேளையில் 11 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Trending News