ராக்கி பால்போவா-ஆக மாறிய டொனால்ட் டிரம்ப்... ட்விட்டரை கலக்கும் PIC!

டொனால்ட் டிரம்ப் தன்னை ராக்கி பால்போவா என்று சித்தரித்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!!

Updated: Nov 28, 2019, 12:04 PM IST
ராக்கி பால்போவா-ஆக மாறிய டொனால்ட் டிரம்ப்... ட்விட்டரை கலக்கும் PIC!

டொனால்ட் டிரம்ப் தன்னை ராக்கி பால்போவா என்று சித்தரித்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!!

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதன்கிழமை மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் பக்கத்தில், தன்னை கற்பனையான குத்துச்சண்டை வீரர் ராக்கி பால்போவா-வை போற்று சிக்ஸ் பேக் பாடியுடன் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்க ஜனாதிபதியின் முகம் ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்றும், முகத்தை குத்துச்சண்டை வீரர் உடலுடன் பொருத்திய போட்டோஷாப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு நெட்டிசன்களின் வைக்கு நொறுக்கு தீணி போட்டுள்ளார். இந்த படத்தில் டிரம்ப் வெற்று மார்புடன் கைகளில் குத்துச்சண்டைக்கான கையுறைகளை அணிந்த படி சண்டைக்குத் தயாராக போஸ் கொடுத்து படத்தை வடிவமைத்துள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவில் டிரம்ப் எந்த ஒரு தலைப்பின் குறிப்புகளையும் குறிப்பிடாமல் வெறுமனே, புகைப்படத்தை மற்றும் பதிவிட்டுள்ளார். டிரம்ப் பதிவிட்ட இந்த பாக்சர் படத்தை வைத்து டுவிட்டரில் ஏராளமான மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. 1982 ஆம் ஆண்டு சில்வஸ்ட்டர் ஸ்டாலோன் நடித்து வெளியான 'ராக்கி 3' படத்தின் போஸ்டரை போட்டோஷாப் செய்திருந்தாலும், டிரம்ப் அந்த புகைப்படத்தில் ராக்கி பெயரை குறிப்பிடவில்லை.

அவர் ட்வீட் செய்த புகைப்படத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வித்தியாசமாக எடுத்துக் கொண்டனர். "உண்மையான சாம்பியன்!" ஒரு டிரம்ப் ஆதரவாளர் எழுதினார். "உண்மையிலேயே முட்டாள்தனமான பஞ்ச் அதிபர் டிரம்ப் மட்டுமே எதிர்நோக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம்." என கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.