சமையல் எண்ணெய் விலை: சமீபத்தில், டீசல்-பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. இப்போது சமையல் எண்ணெய்களுக்கான அடிப்படை வரியும் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தில் இருந்து செய்தி வந்துளல்து. கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக அரசு குறைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வருடமாக வேகமாக அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரியை நீக்கியதை அடுத்து, சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுக்குறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே கூறியதாவது: சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. பல இடங்களில் 20, 18, 10 மற்றும் 7 ரூபாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பாமாயில், நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி மற்றும் அனைத்து முக்கிய எண்ணெய்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
அதானி வில்மர் மற்றும் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மொத்த விற்பனை விலையை லிட்டருக்கு 4-7 ரூபாய் வரை குறைத்துள்ளன.
தொழில்துறை அமைப்பான சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் (SEA) மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்திருந்தது. அதனையடுத்து, ஜெமினி எடிபிள்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹைதராபாத்), மோடி நேச்சுரல்ஸ் (டெல்லி), கோகுல் ரீஃபாயில்ஸ் அண்ட் சால்வென்ட் லிமிடெட் (சித்தாபூர்), விஜய் சோல்வெக்ஸ் லிமிடெட் (அல்வார்) கோகுல் அக்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் என்கே புரோட்டீன்ஸ் பிரைவேட் லிமிடெட் (அஹமத் அஹமத்) போன்ற நிறுவனங்கள் மொத்த விற்பனை விலையை குறைந்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR