ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.
பாந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியின் போது இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றதும் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தினர், பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
துஜ்ஜார் ஷாரிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பயங்கரவாதிகள் இரு பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நேற்று குப்வாரா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனடியாக போலீசார் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தாக்குதலை கொடுத்தனர். பயங்கரவாதிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனையடுத்து கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டது. அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி தொடங்கியது.