பாட புத்தகத்தை வாசிக்க தெரியாத ஆங்கில ஆசிரியர்: வீடியோ

உத்தரபிரதேச அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆங்கில பாட புத்தகத்தை வாசிக்க தெரியாமல் தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Dec 2, 2019, 08:30 AM IST
பாட புத்தகத்தை வாசிக்க தெரியாத ஆங்கில ஆசிரியர்: வீடியோ

உத்தரபிரதேச அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் ஆங்கில பாட புத்தகத்தை வாசிக்க தெரியாமல் தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சமீபத்தில் அந்த பள்ளிக்கு அம்மாவட்ட கலெக்டர் தேவேந்திர பாண்டே திடீரென ஆய்வுக்கு சென்றார். அப்போது ஆங்கில பாடம் நடந்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்ற கலெக்டர், மாணவர்களின் ஆங்கில பாடப்புத்தகத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை வாசிக்குமாறு மாணவர்களிடம் கூறினார். ஆனால் எந்த மாணவருக்கும் அந்த பகுதியை வாசிக்க தெரியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் துணை ஆசிரியர் ராஜ்குமாரியிடம் அந்த பகுதியை வாசிக்குமாறு கூறினார். ஆனால் அவருக்கும் வாசிக்க தெரியாததால், மூத்த ஆசிரியை சுசிலா பாரதியிடம் அந்த பகுதியை வாசிக்க கொடுத்தார். ஆனால் அவராலும் வாசிக்க தெரியவில்லை.

 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவேந்திர பாண்டே அந்த 2 ஆசிரியர்களையும் அதிரடியாக இடைநீக்கம் செய்தார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் விடியோவும் வைரலாகி வருகிறது.

More Stories

Trending News