PF Withdrawal Rules:இவர்களுக்கு 20% டிடிஎஸ் கழிக்கப்படும், விதிகள் இவைதான்!!

PF Withdrawal Rules:தற்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி, கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் இபிஎஃப் தொகையை எடுத்தால், அப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 30, 2023, 05:15 PM IST
  • இபிஎஃப்ஓ முக்கிய செய்தி.
  • தற்போது டிடிஎஸ் 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இது குறைந்த வருமானம் பெறும் குழுவில் உள்ள சம்பளம் பெறும் நபர்களுக்கு உதவும்.
PF Withdrawal Rules:இவர்களுக்கு 20% டிடிஎஸ் கழிக்கப்படும், விதிகள் இவைதான்!! title=

PF Withdrawal Rules: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பான் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு இபிஎஃப் -லிருந்து பணத்தை திரும்ப எடுக்க, டிடிஎஸ் (TDS) விகிதத்தை தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைப்பதாக அவர் அறிவித்தார். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கும்போது அளிக்கப்படும் இந்த வரிக் குறைப்பு, இபிஎஃப்ஓ ​​(பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பதிவேடுகளில் பான் புதுப்பிக்கப்படாத சம்பளம் பெறும் நபர்களுக்கு உதவப் போகிறது.

தற்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி, கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் இபிஎஃப் தொகையை எடுத்தால், அப்போது டிடிஎஸ் கழிக்கப்படும். இபிஎஃப்ஓ உடன் பான் எண் இருந்தால், எடுக்கப்படும் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், டிடிஎஸ் 10 சதவிகிதம் கழிக்கப்படும். எனினும், பான் இல்லாத அல்லது இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட தொகையை எடுப்பதற்கு டிடிஎஸ் விகிதம் 30 சதவீதமாக இருந்தது.

தற்போது டிடிஎஸ் 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறைந்த வருமானம் பெறும் குழுவில் உள்ள சம்பளம் பெறும் நபர்களுக்கு உதவும். 

மேலும் படிக்க | இந்த வேலைகளை இன்னும் செய்யலையா? கடைசி நிமிட எச்சரிக்கை @மார்ச் 31 

பட்ஜெட் 2023 மெமோராண்டத்தில், “பல குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பான் அட்டை இல்லை என்பது கவனிக்கப்படுகிறது. இதனால் பிரிவு 192A இன் கீழ் பல கணக்குகளில் அதிகபட்ச விளிம்பு விகிதத்தில் TDS கழிக்கப்படுகிறது. எனவே, சட்டத்தின் பிரிவு 192A க்கு இரண்டாவது விதியைத் தவிர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் பான் எண்ணை அளிக்கத் தவறினால், திரட்டப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்துவதில், 20 சதவீதம் என்ற விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர், இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதில் டிடிஸ் எதுவும் கழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இபிஎஃப்ஓ -​​க்கு படிவம் 15H அல்லது படிவம் 15G ஐ சமர்ப்பிக்கலாம். படிவம் 15G 60 வயதுக்குட்பட்டவர்களுக்கானது மற்றும் படிவம் 15H 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎஃப்ஓ -ஆல் டிடிஎஸ் கழிக்கப்பட்டவுடன், வரி செலுத்துபவருக்கு டிடிஎஸ் சான்றிதழ் வழங்கப்படும். ஏதாவது ரீஃபண்ட் இருந்தால், வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, ​​பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு TDS சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க | Income Tax: ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள், முக்கிய மாற்றங்களின் விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News