ஹிந்துயிசம் பற்றி முழு ஞானம் பெற்றிருப்பது சாத்தியமா?: மோடி பதிலடி!

இந்துயிசம் குறித்து முழுமையான ஞானத்தைப் பெற்றிருப்பது சாத்தியமா? ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி! 

Last Updated : Dec 3, 2018, 07:53 PM IST
ஹிந்துயிசம் பற்றி முழு ஞானம் பெற்றிருப்பது சாத்தியமா?: மோடி பதிலடி! title=

இந்துயிசம் குறித்து முழுமையான ஞானத்தைப் பெற்றிருப்பது சாத்தியமா? ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி! 

ராஜஸ்தானில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஒன்றில் ராகுல் காந்தி பேசும்பொழுது, இந்துத்துவாவின் சாராம்சம் என்ன என்பது எனக்கு ஆர்வத்தினை தூண்டும் வகையில் உள்ளது.  தயவு செய்து இந்துத்துவாவை பற்றி நீங்கள் படியுங்கள்.  கீதை சொல்வது என்ன? ஒவ்வொருவரிடமும் அறிவு உள்ளது.  உங்களை சுற்றி அறிவு உள்ளது.

நம்முடைய பிரதமர் தன்னை இந்து என கூறி கொள்கிறார். இந்துத்துவாவின் அடிப்படையை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என கூறினார். இந்நிலையில், இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, பழமையான இந்து மதம் குறித்து முழுமையான ஞானத்தைப் பெற்றிருப்பது மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை என்றும், மாமுனிவர்கள் கூட இந்து மதத் முழுமையாக அறிந்து கொண்டதாக கூறிக்கொண்டதில்லை என்றும் ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடி, இந்துயிசத்தின் அடிப்படைகளைகூட புரிந்துகொள்ளவில்லை என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, மோடிக்கு இந்துயிசம் பற்றிய ஞானம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

தமக்கு அந்த ஞானம் இருக்கிறதா இல்லையா என்பதற்காகவா மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என கேள்வி எழுப்பிய பிரதமர், மின்சாரம், நீர், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வைத்துத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் எனக் குறிப்பிட்டார். தமக்கு இந்துயிசம் பற்றிய முழுமையான ஞானம் இருப்பதாக ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை என்றும், ராகுல்காந்தி குடும்பத்தார்தான் அப்படிக் கூறிக்கொள்கிறார்கள் எனவும் மோடி பேசினார். 

 

Trending News