திரைப்படங்களில் காட்டப்படும் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு - NCPCR

திரைப்படங்கள், OTT இயங்குதளங்கள் மற்றும் பிற ஊடகங்களில்  புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதைக் காட்டுவதற்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என NCPCR தகவல்.  

Written by - ZEE Bureau | Last Updated : Jan 17, 2022, 07:58 PM IST
  • புகையிலை பொருட்கள் குறைவான விலையிலும், எளிதில் கிடைப்பதாலும் இளைஞர்களுக்கு தீங்கு ஏற்படுகிறது.
  • திரைப்படங்கள், OTT போன்றவைகளில் புகையிலை பொருட்கள் எந்த வடிவத்தில் காட்டப்பட்டாலும் கூடுதல் வரிவிதிக்க வேண்டும்.
திரைப்படங்களில் காட்டப்படும் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு - NCPCR

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ,  "திரைப்படங்கள், OTT இயங்குதளங்கள் மற்றும் பிற ஊடகங்களில்  புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதைக் காட்டுவதற்கு அதிக வரி விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.  மேலும் குறைந்த விலையில், நச்சுத்தன்மையுள்ள புகையிலை பொருட்கள் எளிதாக கிடைத்து விடுவதால் இவை குறிப்பாக இளைஞர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.  இவற்றிற்கு கூடுதலாக வரியை விதிப்பதால் கிடைக்கும் பணத்தின் மூலம் புகையிலையால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும், அவர்களின்  மறுவாழ்வுக்கும் பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். 

ALSO READ | திரையரங்குகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த மாஸ்டர்!

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 18 வரை கொண்டாடப்படும் தேசிய இளைஞர் வாரத்தில் இந்தியாவை புகையிலை இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என வல்லுநர்கள் கூறினர்.  இந்த நிகழ்வில்  'புகையிலையில் இருந்து விடுதலை: இந்தியா விரும்புவது' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவரான கனூங்கோ, பலவிதமான புகையிலை பொருட்களின் வரிகளை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

smoking

மேலும், புகையிலை பொருட்கள் குறைவான விலையிலும், எளிதில் கிடைப்பதாலும் இதனை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்களுக்கு தீங்கு ஏற்படுகிறது.  வரியினை உயர்த்துவதன் மூலம் கிடைக்கும் பணத்தினை கொண்டு புகையிலை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு பயன்படுத்தலாம்.  மேலும் திரைப்படங்கள், OTT போன்றவைகளில்  புகையிலை பொருட்கள் எந்த வடிவத்தில் காட்டப்பட்டாலும் அவற்றின் மீது கூடுதல் வரிவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

smoking

சமீப காலத்தில் புகையிலையினால் இந்தியா கிட்டத்தட்ட 13 லட்சம் குடிமகன்களை இழந்திருக்கிறது.  இருப்பினும் புகையிலை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றது, குறிப்பாக 13 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் இதனை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என AIIMS மருத்துவமனை பேராசிரியர் கூறியுள்ளார்.

ALSO READ | சூர்யாவுக்காக சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் எப்படி உள்ளது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News