வேளான் சட்டங்களின் பிரதிகளை எரித்து டெல்லி எல்லையில் லோஹ்ரி கொண்டாடிய விவசாயிகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர், நெருப்பைச் சுற்றிக்கொண்டே அரசாங்கத்தை எதிர்க்கும் விதத்திலும் நம்பிக்கையை விதைக்கும் விதத்திலும் பாடல்களைப் பாடினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2021, 09:33 PM IST
  • வேளான் சட்டங்களின் பிரதிகளை எரித்து லோஹ்ரி கொண்டாட்டம்.
  • சிங்கு எல்லையில் மட்டும் மூன்று வேளாண் சட்டங்களின் ஒரு லட்சம் பிரதிகள் எரிக்கப்பட்டன.
  • இந்த லோஹ்ரி போராட்டத்தால் நிறைந்துள்ளது-விவசாயிகள்.
வேளான் சட்டங்களின் பிரதிகளை எரித்து டெல்லி எல்லையில் லோஹ்ரி கொண்டாடிய விவசாயிகள் title=

புதுடெல்லி: மத்திய அரசின் மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள், புதன்கிழமை லோஹ்ரி பண்டிகையை குறிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வேளான் சட்டங்களின் நகல்களை எரித்தனர்.

சிங்கு எல்லையில் மட்டும் மூன்று வேளாண் சட்டங்களின் ஒரு லட்சம் பிரதிகள் எரிக்கப்பட்டன என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பரம்ஜீத் சிங் தெரிவித்தார்.

பயிர்களின் அறுவடையை குறிக்கும் வகையில் லோஹ்ரி பண்டிகை பஞ்சாப் (Punjab) மற்றும் ஹரியானாவில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மக்கள் நெருப்பைச் சுற்றி வந்து, வேர்க்கடலை, அவல், பாப்கார்ன் போன்றவற்றை நெருப்பில் எறிந்து, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும் நடனமாடியும் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

''கொண்டாட்டங்கள் காத்திருக்கலாம். இந்த கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு (Central Government) நிறைவேற்றும் நாளன்றுதான் பண்டிகைகள் அனைத்தையும் நாங்கள் கொண்டாடுவோம்'' என்று ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான குர்பிரீத் சிங் சந்தூ கூறினார்.

விவசாயிகளின் போராட்டத்தின் (Farmers Protest) முக்கிய இடமான டெல்லி-ஹரியானா எல்லையில் பல இடங்களில் லோஹ்ரி பண்டிகையின் போது செய்யப்படுவது போல நெருப்பு மூட்டப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர், நெருப்பைச் சுற்றிக்கொண்டே அரசாங்கத்தை எதிர்க்கும் விதத்திலும் நம்பிக்கையை விதைக்கும் விதத்திலும் பாடல்களைப் பாடினர். வேளான் சட்டங்களின் நகல்களை எரித்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்.

''இந்த லோஹ்ரி போராட்டத்தால் நிறைந்துள்ளது'' என்று பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி கூறினார். “வழக்கமாக லோஹ்ரியில் இருக்கும் மகிழ்ச்சி, வேடிக்கை, ஆடல், பாடல் எதுவும் இந்த லோஹ்ரியில் இல்லை. ஆனால் இந்த முறை எனது விவசாயிகளின் குடும்பத்தினருடன் இங்கு வந்து கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ALSO READ: வேளாண் சட்டங்களின் அமலாக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது Supreme Court

''இன்று, நாங்கள் வேளான் சட்டங்களின் பிரதிகளை எரித்தோம். நாளை மத்திய அரசு அவற்றை எரிக்கும். அவர்கள் அதை செய்துதான் ஆக வேண்டும். நாங்கள் அதை செய்ய வைப்போம்'' என்று விவசாயிகள் உறுதியுடன் கூறினர்.

யோகேந்திர யாதவ், குர்னாம் சிங் சாதுனி உள்ளிட்ட பல விவசாயத் தலைவர்களும், கிசான் ஆந்தோலன் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்ட தீப்பந்தத்தில் வேளான் சட்டங்களின் (Farm Laws) நகல்களை வீசினர்.

முன்னதாக, மேலதிக உத்தரவு வரும் வரை மூன்று வேளான் சட்டங்களின் அமலாக்கத்தையும் நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்ன்று (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேளாண் நிபுணர்களின் கீழ் நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கைகளின்படி, வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, ஹர்சிம்ரத் மன், பிரமோத் ஜோஷி போன்றவர்கள் குழு உறுப்பினர்களாக இருக்கக்கூடும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.  

ALSO READ: Budget 2021: Good news காத்திருக்கிறது, வரிவிலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News