பண்டிகை காலத்திற்கு இந்தியன் ரயில்வே (Indian Railways) தயாராகி வருகிறது. விரைவில் 39 புதிய ஏசி ரயில்கள் பாதையில் இயங்கும். வெவ்வேறு மண்டலங்களுக்கான இந்த 39 புதிய ரயில்களுக்கும் ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்களின் பட்டியலையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து 39 ரயில்களும் சிறப்பு பிரிவில் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து 39 ரயில்களும் ஏசி ரயில்களாக இருக்கும் என்று ரயில்வே (Railways) வெளியிட்டுள்ள புதிய ரயில்களின் பட்டியலிலிருந்து தெளிவாகிறது. 39 ரயில்களில் 26 ரயில்கள் ஸ்லீப்பர் மற்றும் 13 ரயில்கள் இருக்கை வசதி. இருப்பினும், ரயில்கள் எப்போது இயங்கும் என்பதை ரயில்வே இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அவை பண்டிகை காலங்களில் தொடங்கலாம். பண்டிகை காலங்களில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை 200 சிறப்பு ரயில்களும் (Special Trains) இயக்கப்படும் என்று சமீபத்தில் ரயில்வே அறிவித்தது. இந்த 39 ரயில்களையும் அதே பிரிவில் சேர்க்கலாம்.
தற்போது அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களையும் காலவரையின்றி ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்த ரயில்கள் மார்ச் 22 முதல் ரத்து செய்யப்படுகின்றன. சில சிறப்பு ரயில்கள் படிப்படியாக மே முதல் தொடங்கப்பட்டுள்ளன. மே 12 முதல் தில்லியை நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் 15 ஜோடி சிறப்பு ராஜதானி ரயில்களை ரயில்வே இயக்கத் தொடங்கியது. அதே நேரத்தில், 100 ஜோடி நீண்ட தூர ரயில்கள் ஜூன் 1 முதல் இயக்கத் தொடங்கின. செப்டம்பர் 12 முதல் ரயில்வே 80 கூடுதல் ரயில்களை இயக்குகிறது, அவை குளோன் ரயில்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. அக்டோபர் 10 முதல் 9 ஜோடி குளோன் ரயில்கள் இயக்கப்படும்.
துர்கா பூஜையில் பயணிகளின் வசதிக்காக புது டெல்லி மற்றும் சீல்டா இடையே சூப்பர்ஃபாஸ்ட் ஏசி சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில் டங்குனி வழியாக இயங்கும். இந்த ரயில் அக்டோபர் 12 முதல் சீல்டாவிலும், தினமும் அக்டோபர் 13 முதல் புதுதில்லியில் இருந்து இயக்கப்படும். இந்த ரயில் முழுமையாக முன்பதிவு செய்யப்படும். இது முதல் ஏசி, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, ஸ்லீப்பர் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது இருக்கைகளைக் கொண்டிருக்கும்.
IRCTC அக்டோபர் 17 முதல் தனியார் 'தேஜாஸ்' ரயில்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக தேஜாஸின் லக்னோ-புது டெல்லி மற்றும் அகமதாபாத்-மும்பை சேவைகள் 7 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன. தேஜாஸ் ரயில்களை மீண்டும் இயக்குவது தொடர்பாக IRCTC பயணிகள் மற்றும் ரயில் ஊழியர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ALSO READ | உங்கள் பயணத்தை எளிதாக்கும் இந்த 6 புதிய சிறப்பு ரயில்கள்; முழு விவரம் இங்கே
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR