Oct 10 முதல் பெரிய மாற்றம்: இனி 30 mins முன்னரும் train ticket book செய்யலாம். விவரம் உள்ளே!!

இரண்டாவது சார்ட் தயாராவதற்கு முன்னர், டிக்கெட் முன்பதிவு வசதி ஆன்லைனிலும் பிஆர்எஸ் டிக்கெட் கவுண்டர்களிலும் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2020, 05:58 PM IST
  • அவசர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
  • ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.
  • அட்டவணையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான ஏற்பாடும் இருக்கும்.
Oct 10 முதல் பெரிய மாற்றம்: இனி 30 mins முன்னரும் train ticket book செய்யலாம். விவரம் உள்ளே!!  title=

பல முறை நமக்கு திடீரென்று எங்காவது செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அப்படி திடீரென்று ரயிலில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், டிக்கெட் முன்பதிவு (Ticket Booking) செய்வதிலும், உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைக்கான, அதாவது Confirm Ticket கிடைப்பதிலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட தருணங்கலில் waiting list-ல் டிக்கெட் பெற்று அது கன்ஃபார்ம் ஆகுமா என காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால், பெரும்பாலான சமயங்களில் சார்ட் ஒட்டப்படும் வரை நமது சீட் வெய்டிங்கிலேயே இருந்து விடுகிறது.

இப்போது இப்படி அவசர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்தியன் ரயில்வே (Indian Railway) ரயில் ரிசர்வேஷன் சார்டில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது.

அக்டோபர் 10 முதல், ரயில்வேயின் இரண்டாவது ரிசர்வேஷன் சார்ட் (Second Reservation Chart) ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வெளியிடப்படும்.

கோவிட் (COVID) நேரத்தில் விதிகளை மாற்றி, ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இரண்டாவது முன்பதிவு சார்ட்டை உருவாக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்திருந்தது. ஆனால் இப்போது மீண்டும் விதிகளை மாற்றிய ரயில்வே, இரண்டாவது முன்பதிவு சார்ட் ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

ALSO READ: சூரிய சக்தியை பயன்படுத்தி 3 கோடியை மிச்சப்படுத்திய இந்தியன் ரயில்வே..!

இரண்டாவது சார்ட் தயாராவதற்கு முன்னர், டிக்கெட் முன்பதிவு வசதி ஆன்லைனிலும் பிஆர்எஸ் டிக்கெட் கவுண்டர்களிலும் கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக அட்டவணை தயாரிக்கும் நுட்பத்தை சேர்க்க, ரயில் தகவல் அமைப்பு மையம் (CRIS) மென்பொருளில் தேவையான மாற்றங்களை செய்யும்.

ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக ரயிலின் முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இரண்டாவது அட்டவணையின் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளதால், இப்போது பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்ய கூடுதல் வழிகள் இருக்கும். இரண்டாவது சார்ட் தயாரிக்கப்படும் வரை, first come first served முறையில் பயணிகள் இணையத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.

ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இந்த நேர அட்டவணையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான ஏற்பாடும் இருக்கும்.

முன்பதிவு பட்டியல் தொடர்பான விதிகள்

- முதல் முன்பதிவு பயணிகள் சார்ட், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்படுகிறது.

- இரண்டாவது முன்பதிவு பயணிகள் சார்ட், இப்போது ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வெளியிடப்படும். 

ALSO READ: அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News