G-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் நிர்மலா சீதாராமன்!

ஜப்பானில் நடைபெற உள்ள G-20 மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jun 5, 2019, 05:16 PM IST
G-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் நிர்மலா சீதாராமன்! title=

ஜப்பானில் நடைபெற உள்ள G-20 மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

ஜப்பானில் வரும் ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் G-20 நாடுகளில் நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் G-20 மாநாட்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார். அவருடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

நிதி அமைச்சராக பதிவியேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் முதல் சர்வேதச நிகழ்வு இதுவாகும். இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம் சந்தித்து வரும் சவால்கள், நாடுகளின் உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகப்படுத்துதல் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மாநாட்டில் நடைபெறுவுள்ள கலந்துரையாடல்கள் கடந்த ஜூன் 28-29 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற ஒசாகா உச்சி மாநாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் என தெரிகிறது.

உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிதி அமைச்சர்கள் நாட்டின் பாதுகாப்புவாதத்தை அதிகரிப்பது மற்றும் பூகோள வளர்ச்சி, வர்த்தகத்தின் மீதான அதன் தாக்கம் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர் என தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2019-ல் 3.3%-த்தில் இருந்து 3.6%-மாக உலக அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் வரும் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் விவாதங்கள் உலகளாவிய பொருளாதார அபாயங்கள், உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள், வயதான மக்கள்தொகை மற்றும் அதன் கொள்கை தாக்கங்கள் ஆகியவற்றை கண்காணிப்பதோடு, நிதி சந்தை துண்டாக்கல் மற்றும் வாய்ப்புகள் மற்றும் நிதி கண்டுபிடிப்புகளில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News