நீதிமன்றத்தின் தடையை மீறி ரத யாத்திரை நடத்திய பாஜக தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.

மேற்கு வங்காளம்: கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் தடையை மீறி ரத யாத்திரை நடத்திய பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 8, 2018, 12:55 PM IST
நீதிமன்றத்தின் தடையை மீறி ரத யாத்திரை நடத்திய பாஜக தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் ரத யாத்திரைகள் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். பாஜகவின் ரத யாத்திரைகளுக்கு அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்தது. மேற்கு வங்க அரசின் முடிவை எதிர்த்து பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதி மன்றம், மாநில அரசின் முடிவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. விசாரணையை டிசம்பர் 14 ஆம் தேதி தள்ளி வைத்தது.

இதனையடுத்து நேற்று (டிசம்பர் 7) கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் முடிவுக்கு எதிராக பாஜக சார்பில் ரத யாத்திரை நடைபெற்றது. இந்த ரத யாத்திரை நடத்திய பிஜேபி-யின் பொதுச் செயலாளர் கைலாஷ், மேற்கு வாங்க மாநில பிஜேபி-யின் தலைவர் திலிப் கோஷ், ராஜு பானர்ஜி மற்றும் ராகுல் சின்ஹா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. 

மேலும் ஜல்பய்குரி மாவட்டத்தில் நேற்று நடந்த ரத யாத்திரையில் பிஜேபி மற்றும் போலீசார் இடையே ஏற்ப்பட்ட மோதலில் 16 போலீசார் காயமடைந்தனர்.