மேற்கு டெல்லி பர்னிச்சர் சந்தையில் 3 கடையில் திடீர் தீ விபத்து....

மேற்கு டெல்லியில் அமைந்துள்ள பர்னிச்சர் சந்தைப் பகுதியில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடை எரிந்து நாசம்......

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Jan 11, 2019, 01:17 PM IST
மேற்கு டெல்லி பர்னிச்சர் சந்தையில் 3 கடையில் திடீர் தீ விபத்து....
Representational Image

மேற்கு டெல்லியில் அமைந்துள்ள பர்னிச்சர் சந்தைப் பகுதியில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடை எரிந்து நாசம்......

புது தில்லி, ஏப். 24: மேற்கு தில்லியின்  உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் மூன்று அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் பர்னிச்சர் சந்தைப் பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் இயங்கிவரும் பர்னிச்சர் சந்தையில் நள்ளிரவு சுமார் 12.05 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. பர்னிச்சர் பொருட்கள் என்பதால், தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். 

ஆனால், தீ கட்டுக்கடங்காமல் பரவியதால், மேலும் சில வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதனால், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள், தீயை அதிகாலை 4.40 மணியளவில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.