சுவிட்சர்லாந்த்-ன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர்!

48 வருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளது!

Last Updated : Jan 18, 2018, 06:15 PM IST
சுவிட்சர்லாந்த்-ன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர்! title=

48 வருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளது!

சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்னும் பெருமையை பெற்று அனைவரது கவணத்தினையும் தன் பக்கம் ஈர்த்துள்ளவர் நிக்கோலஸ் சாமுவேல் ககர். 

கர்நாடக மாநிலம் உடப்பி-யில் உள்ள CSI லாம்பெர்ட் மெமோரியல் மருத்துவமனையில், 48 ஆண்டுகளுக்கு முன்பு அனுஷியா என்னும் இந்திய தாய்-க்கு மகனாய் பிறந்தார். பின்னர் அவரது தாய் அவரை வேண்டாம் என விட்டுச் சென்றார்.

இதனால், மே.,1 1970 ஆண்டு சுவிஸ் தம்பதியருக்கு (ப்ரிட்ஸ் மற்றும் எலிசபத்) தத்து குழந்தையாக சென்றார். எனினும் அத்தம்பதியர் தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பவில்லை, அடுத்த 4 ஆண்டு காலம் கேரளாவில் குடிபெயர்ந்து அவரை வளர்த்தனர். 

கேரளாவில் அவர்கள் வாழ்ந்தபோது, எலிசபத் இந்திய-சுவிஸ் பள்ளி ஒன்றின் ஆசிரியராக பணியாற்றியுள்ளர், ப்ரிட்ஸ் நட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் (NTTF) ஆயுத தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர் சாமுவேல் 4 வயது குழந்தையக இருந்தபோது தனத தாய்நாடான இந்தியாவை விட்டு பிரிந்து சுவிட்சர்லாந்து சென்ற இவரின் பெற்றோர்(தத்து) அங்கு விவசாயம் பார்த்து கிடைத்த வருமானத்திலேயே அவரை படிக்க வைத்தனர்.

ஆனால் தற்போது அவர் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக உருவெடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தனது வாழ்க்கை பயணத்தினைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டு சுவிட்சர்லாந்தில் வாழும் 143 பேர்களில் ஒருவரான இவர், தான் சிறுவயதில் வாழ்ந்த கேராளா மக்களுடன் தற்போது தொடர்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Trending News