COVID மருத்துவமனையில் தீ விபத்து: பரிதாபமாக உயிர் இழந்தனர் 5 நோயாளிகள்

மருத்துவமனை தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2020, 08:44 AM IST
  • அகமதாபாத் கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து.
  • விபத்தில் ஐந்து நோயாளிகள் கொல்லப்பட்டனர்.
  • விபத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்.
COVID மருத்துவமனையில் தீ விபத்து: பரிதாபமாக உயிர் இழந்தனர் 5 நோயாளிகள் title=

ராஜ்கோட், குஜராத்: குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள COVID-19 மருத்துவமனையின் ICU-வில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து நோயாளிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிற 30 கொரோனா வைரஸ் நோயாளிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், தீக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மவ்தி பகுதியில் உள்ள உதய் சிவானந்த் மருத்துவமனையின் ஐ.சி.யுவில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 நோயாளிகள் காயமடைந்தனர். ஏழு நோயாளிகள் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரி ஜே பி தேவா தெரிவித்தார். "நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து 30 நோயாளிகளை மீட்டோம். தீ விபத்து குறித்த அழைப்பு வந்தவுடன் நாங்கள் அங்கு விரைந்தோம். ICU-விற்குள் 3 நோயாளிகள் இறந்தனர்" என்று அவர் கூறினார்.

மீட்கப்பட்ட நோயாளிகள் மற்ற COVID-19 மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம், அகமதாபாத்தின் (Ahmedabad) நவரங்க்புரா பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு கொரோனா வைரஸ் நோயாளிகள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது சொந்த மாநிலத்தில், கோவிட் மருத்துவமனையில் நடந்துள்ள இந்த மரணங்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

ALSO READ: Corona Vaccine-க்கான முழு செலவையும் மோடி அரசாங்கமே ஏற்கவுள்ளதா

"அகமதாபாத்தில் ஏற்பட்ட மருத்துவமனை தீ விபத்தால் பெரும் வருத்தம் அடைகிறேன். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். நிலைமை குறித்து முதல்வர் @vijayrupanibjp மற்றும் மேயர் @ibijalpatel ஆகியோரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று பிரதமர் ட்வீட் செய்திருந்தார்.

அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் எக்ஸ்-கிராஷியா வழங்குவதாகவும் பிரதமர் அலுவலகம் (PMO) அறிவித்தது. இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்.

ALSO READ: ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் COVID Vaccine: திட்டத்துடன் தயாராகிறது அரசு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News