காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசவும் கூடாது, சிந்திக்கவும் கூடாது: ராஜ்நாத் சிங்

ஹரியானாவில் நடைபெறவிருக்கும் 90 தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஈடுபட்டு உள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 14, 2019, 12:49 PM IST
காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசவும் கூடாது, சிந்திக்கவும் கூடாது: ராஜ்நாத் சிங் title=

புதுடெல்லி: ஹரியானாவில் 90 தொகுதிக்கு சட்டசபைத் தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1,168 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளத்தால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றன. இரண்டு மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜக சார்பில் ஹரியானா மாநிலத்தின் தேர்தல் பிரசாரத்தில் உள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதாவது, பாஜகவின் சாதனைகளை குறித்து மக்களிடம் கூறினார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். மேலும் அவர் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நான் சில அறிவுரைகளைக் கூறிக் கொள்கிறேன். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டி விடுகிறது. ஒருவேளை, உண்மையிலேயே தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று இம்ரான்கான் விரும்பினால், அதற்கு இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப தயாராக இருக்கிறோம். பாகிஸ்தான் நமது அண்டை நாடாக இருப்பதால் சேர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் காஷ்மீர் குறித்து பேசக்கூடாது. காஷ்மீரைப் பற்றி பாகிஸ்தான் சிந்திக்கவே கூடாது. காஷ்மீர் விவகாரம் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால், பாகிஸ்தான் உடைவதை யாராலும் தடுக்க முடியாது. பாகிஸ்தான் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறினார். 

பாகிஸ்தானுக்கு சாதகமான கருத்துக்களை தான் காங்கிரஸ் கூறிவருகிறது என கடுமையாக காங்கிரஸ் கட்சியையும் தாக்கி பேசினார். 

அக்டோபர் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இந்த தேர்தலின் முடிவுகள், மூன்று நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News