புதுடெல்லி: மக்களவை உறுப்பினர் இ அஹமத் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்தார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளிலும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைந்து தாக்கல் செய்யப்பட இருப்பதால் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இந்நிலையில் கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.பி ஒருவர் அவையிலேயே மயங்கி விழுந்தார்.
கேரளாவின் எம்.பி.,யான இ அஹமத் என்பவரின் உடல் நிலை மோசமாகியதால் அவையிலேயே மயங்கி விழுந்தார், பின் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்