கிரிஷ் சந்திர முர்மு இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக பதவியேற்றார்

கிரிஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu) இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) இன்று பதவியேற்றார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2020, 12:53 PM IST
  • முன்னதாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரிஷ் சந்திர முர்மு வியாழக்கிழமை அப்பபதவியில் இருந்து விலகினார்.
  • இந்த வாரம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யவிருக்கும் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு பதிலாக புதிய சி.ஏ.ஜி பதவி ஏற்றுக் கொண்டார்.
  • கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார்.
கிரிஷ் சந்திர முர்மு இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக பதவியேற்றார் title=

கிரிஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu) இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) சனிக்கிழமை , அதாவது, ஆகஸ்ட் 8, 2020 அன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், அவருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்,  தனது ட்விட்டர் பதிவில், பதவி ஏற்ற நிகழ்ச்சியின் படங்களை வெளியிட்டார்.  

 ALSO READ | உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்யும் ரஷ்யா…!!!

புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட கிரிஷ் சந்திர முர்மு அவர்கள்,  சிஏஜி அலுவலகத்தில், மகாத்மா காந்தி மற்றும் பாபாசாகேப் பீம் ராவ் அம்பேத்கர் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக  நியமிக்கப்பட்ட முர்மு வியாழக்கிழமை அப்பதவியில் இருந்து விலகினார்.

ALSO READ | Air India Plane Crash: விமானத்தை ஓட்டியவர் MiG விமானங்களை ஓட்டிய ஒரு அனுபவமிக்க Pilot!! 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர், அதன் முதல்துணை நிலை ஆளுநராக கடந்த ஆண்டு  அவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர்  கணக்கு தணிக்கை அதிகரியாக இருந்த  ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக் காலம் இந்த வாரம் முடிவடைகிறது.

ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா ​​வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

Trending News