கோவா நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சவாந்த் வெற்றி!!

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி!!

Last Updated : Mar 20, 2019, 01:32 PM IST
கோவா நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சவாந்த் வெற்றி!! title=

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி!!

கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த 63 வயதான கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று முன்தினம் காலாமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மனோகர் பாரிக்கரின் மறைவையடுத்து பாஜக-வுக்கு பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லை. எனவே தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹா அழைக்க வேண்டும் என அழைப்பு விடுக்க வேண்டும் எனக்கோரிக்கையுடன் காங்கிரஸ் கடிதம் எழுதியது.

இதற்கிடையில், கோவாவில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று தகவல்கள் வெளியாகின. பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ, மத்திய அமைச்சர் மற்றும் மூத்த பா.ஜ.க. மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கோவாவின் புதிய முதலமைச்சராக பிரமோத் சவந்த் பதவியேற்றார்.  இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 40 எம்எல்ஏக்களில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா ஆகியோர் காலமாகி விட்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் ராஜினாமா செய்தனர்.

இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 36 ஆக குறைந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 19 எம்எல்ஏக்ளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 20 பேர் அரசுக்கு ஆதரவாகவும், 15 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சவந்த் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர், கூட்டணி கட்சி எம்எல்ஏகள் 6 பேர், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 

Trending News