Beach lover-களுக்கு Good News: நவம்பரிலிருந்து இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி!!

இந்த வார தொடக்கத்தில் கோவாவின் சுற்றுலாத் துறை கோவாவின் வடக்கு கடலோரப் பகுதியைத் திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Last Updated : Oct 23, 2020, 02:02 PM IST
  • கோவா சுற்றுலாத் துறை வட கோவா கடற்கரையில் உள்ள பீச்களை திறக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
  • அடுத்த 10-15 நாட்களில் இந்த செயல்முறை முடிவடையும்.
  • கடற்கரையோர குடில்களுக்கான உரிமக் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Beach lover-களுக்கு Good News: நவம்பரிலிருந்து இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி!! title=

மென்மையான மணலும், நீலமும் வெண்மையும் கலந்த அலைகளும் உங்களது அனைத்து கவலைகளையும் மறக்கச் செய்யுமானால், நீங்கள் ஒரு கடற்கரை அதாவது பீச்சின் ரசிகராக இருக்க வேண்டும். அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

சுற்றுலா இயக்குனர் மெனினோ டிசோசா, கோவா சுற்றுலாத் துறை (Goa Tourism) வட கோவா கடற்கரையில் உள்ள பீச்களை திறக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

அடுத்த 10-15 நாட்களில் இந்த செயல்முறை முடிவடையும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.  

இந்த வார தொடக்கத்தில் கோவாவின் சுற்றுலாத் துறை கோவாவின் வடக்கு கடலோரப் பகுதியைத் திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் கேண்டோலிம், கலங்குட் மற்றும் அஞ்சுனா ஆகியவை அடங்கும். கோவாவின் சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று கோவாவின் கடற்கரைகளும், கடற்கரையோர குடில்களும். COVID-19 தொற்றுநோயின் விளைவால், சுற்றுலாத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளடது. கோவாவின் வடக்கு பெல்ட் மற்றும் பீச்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

ALSO READ: சென்னையில் மூன்றில் ஒருவரது உடலில் COVID-19-க்கான antibody-க்கள் உருவாக்கியுள்ளன: ஆய்வு

காத்திருக்கும் வணிக உரிமையாளர்கள் பகுதி ஒதுக்கீட்டு செயல்முறையை ஒரு பெரிய நிவாரணமாக பார்க்கிறார்கள். அக்டோபரிலிருந்தே நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது தாமதமானது.

அதேசமயம், தென் கோவாவில் எல்லை நிர்ணயம் செய்வதற்கான செயல்முறைக்கு மனிதவள பற்றாக்குறையால் வழக்கத்தை விட அதிக நேரம் ஆகக்கூடும். பல சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெற்கு கோவா கலெக்டரேட் கட்டிடத்தில் COVID தொடர்பான கடமைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பணிகளுக்கு சிறிது நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஷேக் எனப்படும் கடற்கரையோர குடில்களின் உரிமையாளர்கள் வரவிருக்கும் பண்டிகை காலம் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். நவம்பர் முதல் வாரத்திலிருந்து தங்கள் தொழிலைத் தொடங்க அவர்கள் தயாராக உள்ளனர்.

தளர்த்தப்பட்ட விதிமுறைகளின்படி, சாலை, விமானம் அல்லது கடல் பாதை வழியாக கோவாவை அடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவிட் -19 தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என்று கோவா (Goa) கூறியிருந்தது. ஆனால் இப்போது அத்தகைய விதி இல்லை. தனி மனித இடைவெளி, சானிடிசர்களைப் பயன்படுத்துதல், முகக்கவசங்களை (Facemask) அணிவது உள்ளிட்ட கட்டாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றும் அனைத்து மக்களும் கோவாவுக்குப் பயணம் செய்யலாம்.

தொற்றுநோயால் நஷ்டம் அடைந்த ஆபரேட்டர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் முயற்சியில், கடற்கரையோர குடில்களுக்கான உரிமக் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ALSO READ: COVID Update: இந்தியாவில் மீண்டும் அதிகரித்தது தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News