ரயில் பயணிகளுக்கு ரயில்வே துறை கொடுத்திருக்கும் குட் நியூஸ்..!

Indian Railways introduces 5 major upgrades | இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 5 முக்கியமான விஷயங்களை முன்னெடுக்க உள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 29, 2024, 08:44 AM IST
  • ரயில்வே துறையில் வரும் மிகப்பெரிய மாற்றங்கள்
  • இந்த 5 மாற்றங்கள் சீக்கிரம் அமலாகப்போகிறது
  • ரயிலில் ஜிம் உள்ளிட்ட வசதிகளும் வர வாய்ப்பு
ரயில் பயணிகளுக்கு ரயில்வே துறை கொடுத்திருக்கும் குட் நியூஸ்..!

Indian Railways | உலகின் மிகப்பெரிய ரயில் போக்குவரத்து கொண்ட நாடு இந்தியா. தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் இந்தியாவில் பயணிக்கின்றனர். பட்ஜெட் குறைவாகவும், விரும்பிய ஊர்களுக்கும் செல்ல முடிவதால் இந்தியாவில் ரயில் போக்குவரத்து (Indian Railways News) சேவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே லோக்கல் முதல் வெளியூர் பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர் மக்கள். அதனால், பயணிகளின் ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ரயில்வே துறை முக்கியமான மாற்றங்களை அடிக்கடி செய்து வருகிறது. அந்தவகையில் இந்திய ரயில்வே துறை கொண்டு வர உள்ள மிக முக்கியமான 5 மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Add Zee News as a Preferred Source

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்திய ரயில்வே துறை அறிவித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு புதிய பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை முடிவு செய்திருக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிவே ரயில் பாதை அமைப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பாதையில் நவீன வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | IRCTC வழங்கும் பிளாக் ப்ரைடே ஆஃபர்... விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி சலுகை

இ-கேட்டரிங் சேவை : இரயில்வே இ-கேட்டரிங் சேவையிலும் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இ-கேட்டரிங் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம், பயணிகள் தங்கள் விருப்பப்படி உணவை உண்ணும் வசதியை ரயில்வே வழங்குகிறது. ரயில் பயணிகள் இப்போது 500 க்கும் மேற்பட்ட நிலையங்களில் உணவை ஆர்டர் செய்யலாம். இதில், பயணிகளுக்கு அசைவ மற்றும் சைவ உணவு விருப்பங்கள் உள்ளன. IRCTC செயலி மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்.

QR குறியீடு கொண்ட டிக்கெட்டுகள் : ரயில்வே க்யூஆர் குறியீடு டிக்கெட் விதியை அமல்படுத்தியது. இது டிக்கெட் சோதனையை எளிதாக்குகிறது. ஒரு ஸ்கேனில், பயணிகளின் முழுத் தகவல் TTE-க்கு தெரியும். இது TTE-யின் பணியையும் எளிதாக்கும்.

ரயில்வே செயலி : இரயில் பயணத்தின் போது, பயணம் தொடர்பான முழுமையான தகவல்கள் IRCTC செயலியில் கிடைக்கும். ரயில்வே இந்த ஆண்டு தகவல் அமைப்பில் முன்னேற்றம் செய்துள்ளது. இதில், ரயிலைக் கண்காணிப்பது, ஆட்டோமேடிக் அறிவிப்புகள் விரும்பும் மொழிகளில் செய்யப்படும், மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் போன்ற வசதிகள் IRCTC புதிய செயலியில் கிடைக்கின்றன.

பொதுப்பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு : பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ரயில்களின் பொதுப் பெட்டிகளில் புதிய பெட்டிகள் சேர்க்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக ரயில்வே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது தவிர, வசதியாக, வைஃபை, பாதுகாப்பு, ஜிபிஎஸ் போன்ற வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கோச்சுகளை ரயில்வே உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க | தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News