Good news for Students: மதிய உணவு திட்டத்தில் 11.8 கோடி மாணவர்களுக்கு பணம் கொடுக்கப்படும்

கொரோனா பாதிப்பால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினால் பயனடையும் கோடிக்கணக்கான மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 29, 2021, 11:12 AM IST
  • மதிய உணவு திட்டத்தில் 11.8 கோடி மாணவர்களுக்கு பணம் கொடுக்கப்படும்
  • சமையல் செலவுக்கு சமமான தொகையை வழங்கும் திட்டம் இது
  • இந்தத் திட்டத்தினால் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவார்கள்
Good news for Students: மதிய உணவு திட்டத்தில் 11.8 கோடி மாணவர்களுக்கு பணம் கொடுக்கப்படும்   title=

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினால் பயனடையும் கோடிக்கணக்கான மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த கவலையை போக்கும் வகையில் அவர்களுக்காக இந்திய அரசு இன்று ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பறிமாற்ற திட்டத்தின் (Direct Benefit Transfer) மூலம் பணம் அனுப்பப்படும்.

மதிய உணவு திட்டத்திற்கு தகுதி பெறும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமையல் செலவுக்கு சமமான தொகையை வழங்கும் திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்'  (Ramesh Pokhriyal Nishank) ஒப்புதல் அளித்துள்ளார்.

Also Read | Covid Updates May 29 : கடந்த 24 மணி நேரத்தில் 1.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

மத்திய அரசின் இந்த ஒப்புதலால் 11.8 கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பறிமாற்ற திட்டத்தின் (Direct Benefit Transfer) மூலம் பணம் விநியோகிக்கப்படும். 

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை விநியோகிக்கும் திட்டத்திற்கும், இலவச மதிய உணவு திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

இலவச மதிய உணவுத் திட்டத்தின் (MDM scheme) கீழ் சுமார் 11.8 கோடி மாணவர்களுக்கு மத்திய அரசு DBT மூலம் நிதி உதவி வழங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' ட்வீட் செய்துள்ளார். இதற்காக மேலும் 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

Also Read | CM Stalin: சிங்கப்பூர் Oxygen Cylinders 8 மாவட்டங்களுக்கு விநியோகம்

இந்த முடிவு குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவைப் பாதுகாக்க உதவும் என்றும் இந்த சவாலான தொற்றுநோய் காலத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்க உதவும் என்றும் அரசு கூறுகிறது. இதற்காக, சுமார் 1200 கோடி ரூபாய் கூடுதல் தொகையை மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வழங்கும்.

மத்திய அரசின் இந்த ஒரு முறை சிறப்பு நல நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கொடுக்கப்படும். அந்த பள்ளிக்கூடங்களில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11.8 கோடி குழந்தைகளுக்கு இந்த நிதியுதவி பயனளிக்கும்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் முதன் முதலில் மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாளடைவில் இத்திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப் பட்டது. பின்னர், இத்திட்டம் தேசிய திட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Also Read | ICG on Colombo Ship fire: தணிந்தது தீ, எண்ணெய் கசிவு இல்லை

பசி மற்றும் ஊட்டசத்து குறைவால் அவதிப்படும் மக்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் வரப்பிரசாதம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் உன்னதாக திட்டம் என்று மதிய உணவு திட்டம் பாராட்டப்படுகிறது.

பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை, குறிப்பாக பெண் குழந்தைகளின் சேர்க்கையை மதிய உணவு திட்டம் அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, மத்திய அரசின் இந்தத் திட்டமானது அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பை பெறும் என்று உறுதியாக சொல்லமுடியும்.

Also Read | Positive Angle of  Corona: லேசான கொரோனா பாதிப்பு நோயெதிர்ப்பை அதிகரிக்கும்   

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News