பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான நில எல்லைப் போக்குவரத்து ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது!
இரு நாடுகளின் எல்லையில் உள்ள சாதாரணமாக வாழும் மக்களுக்கு ஏற்கெனவே இருக்கும் சுதந்திர இயக்க உரிமைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒத்திசைத்தல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் எனவும், சரியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களின் அடிப்படையில் மக்களுடைய இயக்கத்தை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்கப்படுகிறது.
இந்தியா-மியன்மார் எல்லையில் உள்ள மக்கள் போக்குவரத்திற்கு இந்த உடன்படிக்கை பயனுள்ளதாக இருக்கும் எனவும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மியான்மரில் உள்ள மக்களுடன் இணைப்பையும், ஒருங்கிணைப்பையும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது வட கிழக்கு பகுதியின் பொருளாதரத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிப்பதோடு, வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்பாடாகவும் கருதப்படுகிறது. மேலும் எல்லையோரத்தில் வாழும் பழங்குடி சமூகங்களின் பாரம்பரிய உரிமைகளை இந்த ஒப்பந்தம் பாதுகாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!