SSC தேர்வு வினாத்தாள் கசிந்ததாகப் புகார்!

சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 5, 2018, 02:27 PM IST
SSC தேர்வு வினாத்தாள் கசிந்ததாகப் புகார்! title=

சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

சார்நிலைப் பணியாளர் தேர்வு கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. தேர்வின் வினாத்தாள் வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தேர்வு எழுதியவர்களில் சிலர், பணியாளர் தேர்வுக்குழு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். 

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசிடம் பரிந்துரைக்குமாறு, பணியாளர் பயிற்சி துறையிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக பணியாளர் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து எஸ்.சி.சி. தேர்வுக்குழு விசாரணைக் கமிஷனில் சி.பி.ஐ இந்த மனுவை விசாரணை செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.

Trending News