பிஎம்சி வங்கியில் சிக்கியுள்ள ரூ.100 கோடி ; அதிர்ச்சியில் குருத்துவார்கள்

நாடு முழுவதும் குருத்வாராக்களின் 100 கோடிக்கும் அதிகமான ரூபாய் பிஎம்சி வங்கியில் சிக்கியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 7, 2019, 03:48 PM IST
பிஎம்சி வங்கியில் சிக்கியுள்ள ரூ.100 கோடி ; அதிர்ச்சியில் குருத்துவார்கள் title=

புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC)  வங்கியின் மோசடி குறித்த தகவல்கள் வெளிவந்த பின்னர், வங்கியில் கணக்கு வைத்திருந்த ஆயிரக்கணக்கானோர் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள சீக்கிய சமயத்தவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்துவார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மையில், நாடு முழுவதும் குருத்வாராக்களின் 100 கோடிக்கும் அதிகமான ரூபாய் பிஎம்சி வங்கியில் சிக்கியுள்ளது.

குரு நானக் தேவின் 550வது பிறந்தநாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி யில் குருத்வாரின் பணம் சிக்கியுள்ள சம்பவம் குருத்வாரா குழுக்களுக்கிடையே ஆழ்ந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) மஹீமில் இருந்து சிங்கை கைது செய்து ஞாயிற்றுக்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

மும்பை நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் எஸ்.கே. வர்யாம் சிங்கை அக்டோபர் 9 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. 

கடந்த செப்டம்பர் 24 ம் தேதி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிறுவனத்தை ரிசர்வ் வங்கி (RBI) ஆறு மாத கால தடை விதித்தது. இந்த தடை வங்கிக்கு பெரும் அடியாக அமைத்துள்ளது. இதன் காரணமாக, பிஎம்சி வங்கியின் வழக்கமான வணிகம் தடைசெய்யப்பட்டது. இந்த முடிவிற்குப் பிறகு, வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

Trending News