புதுடெல்லி: புனித நகரத்தில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் வழிபாடு நடத்துவதற்கான உரிமை கோரி வாரணாசி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஐந்து இந்து பெண் வழிபாட்டாளர்களின் வழக்கை விசாரிப்பதை எதிர்த்து முஸ்லிம் தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதி ஜே.ஜே.முனீர் அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், டிசம்பர் 23, 2022 அன்று தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு உள்ளூர் வாரணாசி நீதிமன்றத்தால் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளது.
Allahabad High Court dismisses the Muslim side's plea challenging maintainability of five Hindu women worshippers' suit filed in Varanasi Court seeking the right to worship inside Gyanvapi mosque in Varanasi pic.twitter.com/TJUAXBElY5
— ANI (@ANI) May 31, 2023
ராக்கி சிங் உட்பட 5 பெண்கள், அன்னை சிருங்கார கௌரியை வழிபட அனுமதி தேவை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்ந்தனர். ஞானவாபி மசூதி - சிருங்கர கௌரி வழக்கு என்று அறியப்படும் இந்த வழக்கில் நான்கு பெண் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
ஞானவாபி மசூதி தொடர்பாக ஏழு வழக்குகள் உள்ளன, அவை ஒரே மாதிரியானவையாக இருந்தாலும் வெவ்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்ப்பட்டிருந்தன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ஏழு வழக்குகளின் விசாரணையையும் ஒன்றாக நடத்த உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது.
வாரணாசி மாவட்ட நீதிபதியின் முடிவை சவால் செய்த, இன்டெஜாமியா மஸ்ஜித் (Anjuman Intezamia Masjid (AIM)) கமிட்டி மற்றும் உத்தரபிரதேச சன்னி வக்ஃப் வாரியம் (Uttar Pradesh Sunni Waqf Board) ஆகியவை 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மற்றும் மத்திய வக்ஃப் சட்டத்தின் கீழ் ஐந்து இந்து பெண்கள் வழிபாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தன.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வாரணாசி மாவட்ட நீதிபதி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. முஸ்லிம் தரப்பு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தாக்கல் செய்து, ராக்கி சிங் உள்ளிட்ட பெண்களின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மேல்முறையீடு செய்தது.
மேலும் படிக்க | அலெர்ட்! ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்! முழு விவரம் இதோ!
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பதிலளித்த இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று கூறினார். “அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டியின் மனு பராமரிக்க முடியாதது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது, மேலும் அதை தள்ளுபடி செய்தது,” என்று அவர் ANI உடன் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்து தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி, இது ஒரு "பெரிய வெற்றி" என்று கூறி நீதிமன்றத்தின் முடிவை வரவேற்றார்.
"இது இந்து தரப்புக்கு ஒரு பெரிய வெற்றி. கியான்வாபிக்குள் வழிபடும் உரிமை கோரி ஐந்து இந்து பெண் வழிபாட்டாளர்களின் வழக்கை பராமரிப்பதை எதிர்த்து அஞ்சுமான் இன்டாஜாமியா மசூதி கமிட்டி தாக்கல் செய்த CPC உத்தரவு 7 விதியை தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்" என்று அவர் கூறினார்.
இந்த சர்ச்சை, ஏப்ரல் 2021 முதல் நீதிமன்றங்களில் உள்ளது, வாரணாசி நீதிமன்றம் மசூதி வளாகத்தின் விரிவான ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) உத்தரவிட்டது.
மேலும் படிக்க | பப்ஜியில் மலர்ந்த காதல்: போக்சோவில் கைதான இளைஞர் - பெற்றோருடன் சென்ற 17 வயது சிறுமி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ