பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையால் High Alert!!

பயங்கரவாத தாக்குதல் குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2021, 10:32 AM IST
பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையால் High Alert!! title=

புதுடெல்லி: பண்டிகை காலங்களில் தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள்னர். இதைத் தொடர்ந்து, தேசிய தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறையினர் உஷார் நிலையில் உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 

புதுடெல்லி (New Delhi) மாவட்ட துணை கமிஷனர் தீபக் யாதவ் வியாழக்கிழமை, "பயங்கரவாத தாக்குதல் குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். தகவல் வந்தவுடன் சந்தைகள் மால்கள் போன்ற பொதுப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறினார்.

"இருப்பினும், இந்த நடைமுறை டெல்லியில் தினசரி நடக்கிறது. எனினும், பண்டிகைக் காலங்களிலும், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 போன்ற சந்தர்ப்பங்களிலும், நாங்கள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: இந்தியா 6வது முறையாக UNHRC உறுப்பினராக தேர்வு...!!!

காவல்துறையினர் ஒவ்வொரு நாளும், வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் இதுபோன்ற இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்வதாக டிசிபி யாதவ் மேலும் தெரிவித்தார். "நாங்கள் வாடகை வீடுகளில் இருக்கும் நபர்கள், தனி நபர்களுக்கான சோதனை, பல வித கண்காணிப்புகள் மற்றும் பிற திடீர் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

அனைத்து அதிகாரிகளும் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வதிலும், சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டெல்லியின் லட்சுமி நகரில் பயங்கரவாதிகள் பிடிபட்டனர்

இந்த வார தொடக்கத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதி (Terrorist) தலைநகர் டெல்லியின் லக்ஷ்மி நகர் மாவட்டத்தில் இருந்து டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவினரால் பிடிக்கப்பட்டார்.

பிடிபட்ட பயங்கரவாதி போலியான இந்திய அடையாள அட்டையுடன் வாழ்ந்து வந்தான். அவனது உடைமைகளில் ஒரு ஏகே -47 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள், ஒரு கையெறி குண்டு மற்றும் 50 சுற்றுகள் கொண்ட இரண்டு அதிநவீன கைத்துப்பாக்கிகள் ஆகியவை இருந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொஹமத் அஸ்ரஃப் என்ற அந்த பயங்கரவாதி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவன்.

பிடிபட்ட பயங்கரவாதி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், வெடிபொருட்கள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்ஷ்மி நகரின் ரமேஷ் பார்க் பகுதியில் உள்ள அவனது தற்போதைய இல்லத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.

ALSO READ: டிராஸ் பகுதியில் குடியரசுத் தலைவர் ராணுவ வீரர்களுடன் விஜயதசமி விழா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News