பாகிஸ்தான் பயிற்சி பெற்ற 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்

தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 14, 2021, 08:26 PM IST
பாகிஸ்தான் பயிற்சி பெற்ற 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்

புதுடெல்லி: தில்லி போலீசார் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14, 2021) பயங்கரவாத தாக்குதல் திட்டத்தை முறியடித்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் உட்பட 6 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக  பல இடங்களில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றினர்

"பாகிஸ்தான் பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

"கோட்டாவைச் சேர்ந்த சமீர், டெல்லியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரில் இருவர் மஸ்கட் வழியாக பாகிஸ்தானுக்கு சென்று அங்கு பயிற்சி பெற்றவர்கள். அங்கு அவர்களுக்கு 15 நாட்களுக்கு, வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை கையாளவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது’ என டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு நீரஜ் தாக்கூர் கூறினார்.

ALSO READ | பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா: பிரதமர் மோடி புகழாரம்

 

இது குறித்து போலீஸார் மேலும் கூறுகையில், தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் அவர்களால் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணி எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஆயுதங்களை கொண்டு வந்து அவற்றை மறைத்து வைக்கும் பணியை மேற்கொண்டது. மற்ற குழு மோசடி வழியில் நிதி உதவி அளித்தது என தெரிவித்தார்

தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவுஇது குறித்து மேலும் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கள் குழுவில் இருந்த 14-15 வங்காள மொழி பேசியதாக  தெரித்ததாக கூறியது.

"இந்த நடவடிக்கை எல்லைக்கு அப்பால் இருந்து மேற்கொள்ளப்பட்ட  ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமாக தோறுகிறது" என்று டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மேலும் கூறியது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றூம் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ | PM on Subramania Bharati: பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News