பீதியை கிளப்பும் H3N2 வைரஸ் ! அறிகுறிகளும் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளும்!

H3N2 வைரஸ்: இந்தியாவில் வைரஸ் காய்ச்சலின் (H3N2) தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் காரணமாக, கர்நாடகா மற்றும் ஹரியானாவிலும் தலா ஒருவர் இறந்து விட்டனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2023, 06:08 PM IST
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில், H3N2 வைரஸால் இறந்த நபருக்கு 82 வயது.
  • நாட்பட்ட நோய் உள்ளவர்கள், H3N2 நோயால் தீவிர பாதிப்பு உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • இந்தியாவில் வைரஸ் காய்ச்சலின் (H3N2) தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
பீதியை கிளப்பும்  H3N2 வைரஸ் ! அறிகுறிகளும் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளும்! title=

H3N2 வைரஸ்: இந்தியாவில் வைரஸ் காய்ச்சலின் (H3N2) தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் காரணமாக, கர்நாடகா மற்றும் ஹரியானாவிலும் தலா ஒருவர் இறந்து விட்டனர். இதுவரை, நாட்டில் 90 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நாட்டில் சிகிச்சையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. H3N2 வைரஸால் இறப்புகள்  பதிவாகியுள்ள நிலையில், மக்கள் மனதில் பலவிதமான கேள்விகளும் அச்சங்களும் எழத் தொடங்கியது.

உண்மையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், H3N2 வைரஸால் இறந்த நபருக்கு 82 வயது. வயதானவர்கள், இதய நோயாளிகள், சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் அல்லது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் வகையில் வேறு ஏதேனும் நோய் போன்ற நாட்பட்ட நோய் உள்ளவர்கள், H3N2 நோயால் தீவிர பாதிப்பு உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். 

இறந்தவர்களிடம் காணப்பட்ட அறிகுறிகள்

கர்நாடகாவில் இறந்தவருக்கு சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தது. வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இறந்ததையடுத்து, சுகாதார துறை குழுவினர், ஆலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து ஸ்வாப் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்காணிக்க துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அறிகுறிகள் தென்பட்டால், சொந்தமாக மருந்து சாப்பிட வேண்டாம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | இந்த ப்ராப்ளம் இருக்கா? அப்போது நீங்க மறந்து கூட வாழைப்பழத்த சாப்பிடாதீங்க

மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட H3N2 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் 6 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாநில அரசு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி, இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் H3N2 மாறுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார். இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் பாதிக்கிறது. கர்ப்பிணிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுதாகர் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி பாதுகாப்பு தருமா

கொரோனா தடுப்பூசி H1N1 தொற்றிலிருந்து ஓரளவு பாதுகாப்பை அளிக்கிறது, ஆனால் H3N2 க்கு காய்ச்சல் தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தொற்று பாதிப்பு 20 நாட்களில் குறையும்

H3N2 வைரஸின் தாக்கம் இன்னும் 15 முதல் 20 நாட்களில் குறையும் என்று மருத்துவர்கள் நம்பினாலும், வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் நின்றுவிடும்.

தடுப்பு முறைகள் என்ன?

மாஸ்குகள் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்துவதன் மூலம் H3N2 தொற்று பரவலை பெருமளவில் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய்க்கான பரிசோதனையும் கொரோனா வைரஸ் பரிசோதனையைப் போலவே செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | பிளாக் காப்பியும் உடலுக்கு கேடா? - பக்க விளைவுகளை கேட்டாலே பயம் இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News