மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மந்தர்மணியில் திங்கள்கிழமை (ஜூன் 29, 2020) ஒரு பெரிய திமிங்கலம் கரையில் இறந்து கிடந்தது. திமிங்கலம் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மந்தர்மணி காவல் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்து திமிங்கலம் இறந்ததன் காரணத்தை புரிந்து கொள்ள முயன்றனர்.
இருப்பினும், திமிங்கலத்தின் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை, மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
READ | மனிதரை போல் ஆங்கிலம் பேசும் அதிசய திமிங்கலம்!
READ | வீடியோ: 32-அடி குட்டித் திமிங்கிலமும், பொதுமக்களும்!
முன்னதாக ஜூன் 7 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ஆலகங்குளம் அருகே ஆற்றாங்கரை என்ற இடத்தில் 18 அடி நீளமுள்ள, ஒரு கால் விந்து திமிங்கலத்தின் சடலம் கரைக்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதி அரிய கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. ஆற்றாங்கரை கடற்கரையில் மரைன் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் ஒன்றரை டன் எடையுள்ள 18 அடி நீளம் கொண்ட புள்ளி சுறா மீன் இறந்து கரை ஒதுங்கியது. உடலில் காயங்கள் இருந்தன.
வன உயிரினக்காப்பாளர் மாரிமுத்து, ராமநாதபுரம் ரேஞ்சர் சதீஷ் முன்னிலையில் கால்நடை டாக்டர் நிஜாமுதீன் உடற்கூறு ஆய்வு செய்தார். அப்பகுதியில் புதைக்கப்பட்டது. புள்ளி சுறா 70 முதல் 130 ஆண்டு உயிர் வாழும். 20 டன் எடை வரை வளரக்கூடியது. 300 பற்கள் இருந்தாலும் சாதுவான மீனாகும். உலகிலேயே பெரிய மீன் வகை புள்ளி சுறாவாகும். ராமநாதபுரம் பகுதியில் இதுவரை 4 புள்ளி சுறாக்கள் கரை ஒதுங்கியுள்ளது.