''நானும் காலா தான்'' ஜிங்னேஷ் மேவானி ட்விட்!!

பா.ரஞ்சித் இடக்கியுள்ள ரஜினிகாந்த்-ன் காலா படத்தை பாராட்டி ஜிங்னேஷ் மேவானி ட்விட்டர்!

Last Updated : Jun 12, 2018, 03:34 PM IST
''நானும் காலா தான்'' ஜிங்னேஷ் மேவானி ட்விட்!!

பா.ரஞ்சித் இடக்கியுள்ள ரஜினிகாந்த்-ன் காலா படத்தை பாராட்டி ஜிங்னேஷ் மேவானி ட்விட்டர்!

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 7-ம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடி கொண்டிருகிறது. 

கபாலி ரஜினிக்காக தான் ஓடியது என சில பேர் கூறினார், ஆனால் காலா முழுக்க முழுக்க ரஞ்சித் படம் என்பதை ரஜினி ரசிகர்களே சொல்வதை கேட்கலாம். தியேட்டரில் டைட்டில் கார்டில் வரும் ரஞ்சித் பெயருக்கு, ரசிகர்கள் தரும் கை தட்டல்களே இதை உறுதிப் படுத்துகின்றன. 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எம்.எல்.ஏ-வும், ஒடுக்கப் பட்டோருக்கான செயல்பாட்டாளருமான ஜிங்னேஷ் மேவானி தனது ட்விட்டரில், காலா திரைப்படம் பற்றிய ஒரு பதிவினை இட்டுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது...! 

பா.ரஞ்சித்-ன் காலா படத்தை நிச்சயம் பாருங்கள். நான் நேற்று தான் பார்த்தேன், என்னையும் காலாவாக உணருகிறேன். சகோதரர் பா.ரஞ்சித் இன்னும் ஒரு சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். சவாலான விஷயங்களை மிக நுட்பமாக மற்றுமொரு பொழுது போக்கு வழியில் சொல்லியிருக்கிறார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் பா.ரஞ்சித்" என பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவை பார்த்த பா.ரஞ்சித் ஜிங்னேஷ் மேவானிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

 

More Stories

Trending News