நான் சண்டைக்காரி அல்ல, இதை யாராவது நிரூபித்தால் ட்விட்டரை விட்டு விலகுவேன்: கங்கனா

நான் சண்டைகளை தொடங்குவதில்லை, இதை யாராவது நிரூபித்தால் ட்விட்டரிலிருந்து நான் விலகுவேன் என கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்!!

Last Updated : Sep 18, 2020, 10:58 AM IST
நான் சண்டைக்காரி அல்ல, இதை யாராவது நிரூபித்தால் ட்விட்டரை விட்டு விலகுவேன்: கங்கனா title=

நான் சண்டைகளை தொடங்குவதில்லை, இதை யாராவது நிரூபித்தால் ட்விட்டரிலிருந்து நான் விலகுவேன் என கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்!!

சிவசேனா முதல் ஊர்மிளாவரை, கங்கனா ரனாவத் (Kangana Ranaut) பலருடன் சமூக வலைத்தளம் மூலமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், தான் ஒருபோதும் சண்டையைத் தொடங்குவதில்லை, முடித்து வைக்கிறேன் என்றும், என் தவறு நிரூபிக்கப்பட்டால் ட்விட்டரில் இருந்து விலகுவேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.... "நான் ஒருபோதும் சண்டையைத் தொடங்க மாட்டேன், ஆனால் ஒவ்வொரு சண்டையையும் முடிக்கிறேன். யாராவது உங்களை எதிர்த்துப் போராடும் போது அவர்களை மறுக்கக் கூடாது என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம் தான் போதைப்பொருள்களின் பிறப்பிடம், அதனால் கங்கனா முதலில் தனது சொந்த மாநிலத்தில் இந்த பிரச்னையை சரிபார்க்குமாறு கங்கனாவிடம் கூறிய ஊர்மிளாவிற்கு, தன் நடிப்பு திறமையால் வெளியில் தெரியாத ஊர்மிளா ஒரு  மென்மையான ஆபாச நட்சத்திரம் என்று பதிலடி கொடுத்தார்.

ALSO READ | ஹீரோவுடன் படுத்த பிறகு...அதுவும் 2 நிமிட ரோல்..கொந்தளித்த கங்கனா!!

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுடன் மோதலில் ஈடுபட்ட கங்கனா அவரை தனது போராட்டத்தை இழிவுபடுத்த விரும்பிய முட்டாள் என்று அழைத்த போது உங்களுக்கு ஏன் மத்திய அரசிடமிருந்து Y+ பாதுகாப்பு தேவை என்று கம்ரா கேள்வி எழுப்பினார். இதை தொடர்ந்து கங்கனாவிடம் அனுராக் காஷ்யப், நீங்கள் ஒரு உண்மையான மணிகர்னிகா என்று உங்களை நம்பினால், சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்காக போராடுங்கள் என கூறினார். 

இதற்கு பதிலடி வழங்கிய கங்கனா நீங்கள் உருவகங்களை உண்மையாக எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எப்படி இவ்வளவு முட்டாள் ஆகிவிட்டீர்கள்? நாம் நண்பர்களாக இருந்த போது நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

Trending News