குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது: ராகுல் காந்தி

குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது. துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 29, 2019, 10:10 AM IST
குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது: ராகுல் காந்தி

திருச்சி: குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது. அவரது பெற்றோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல் என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். மிகவும் வேதனைக்குறிய, இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அனைவரையும் விட்டு பிரிந்து சென்ற 2 வயது குழந்தை சுர்ஜித்துக்கு அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் ஆழ்ந்த இரங்கல் மட்டும் அஞ்சலில் செலுத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழதையை மீட்க, அன்று முதல் இன்று அதிகாலை வரை இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

குழந்தை சுஜித் மறைவு குறித்து முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மிகவும் வேதனையாக உள்ளது என ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது. துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News