விண்வெளியை ஆக்கிரமிக்கப்போகும் இசைஞானியின் இசை!

இந்தியாவின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இளையராஜா பாடிய பாடல் சுதந்திர தினத்தன்று சாட்டிலைட்டில் ஒலிக்கப்போகிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 04:35 PM IST
  • சுதந்திர தின விழாவின் போது சாட்டிலைட் ஒன்றை தமிழக மாணவர்கள் குழு விண்ணில் ஏவ இருக்கிறது.
  • இளையராஜா பாடலை விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
விண்வெளியை ஆக்கிரமிக்கப்போகும் இசைஞானியின் இசை!  title=

திரைத்துறையில் இன்றளவும் அசைக்கமுடியாத இசை ஜாம்பவானாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா (ilayaraja).  மதிமயக்கும் இவரது பாடல்களுக்கு இளைஞர் தொடங்கி பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர்.  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடைபெற போகும் சுதந்திர தின விழாவின் போது மிக குறைந்த அளவில் எடைகொண்ட சாட்டிலைட் ஒன்றை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு விண்ணில் ஏவ இருக்கிறது. 

ALSO READ | திரைப்படங்களில் காட்டப்படும் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு - NCPCR

அதில் கூடுதல் சிறப்பாக இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இளையராஜா பாடும் பாடலை சுதந்திர விழாவின்போது விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்த மாணவர்கள் தான் உலகிலேயே குறைவான எடைகொண்ட சாட்டிலைட்டை தயாரிக்கின்றனர். இதுவரை தயாரித்ததை விட இந்த சுதந்திர தின விழாவுக்காக தயாரிக்கப்பட்ட சாட்டிலைட்டை மிக குறைந்த எடையில் தயாரித்துள்ளனர். 

இந்த பாடல் சுவானந்த் கிர்கிரே கைவண்ணத்தில் ஹிந்தியில் உருவானது, இதனை தற்போது இளையராஜா தமிழ் மொழியில் பாடியுள்ளார்.  இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இந்த ஆண்டு 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்க உள்ளார்.  இந்த முயற்சி குறித்து மாணவர்கள் இந்திய பிரதமர் மோடியிடமும் கலந்தோசித்து உள்ளனர்.  மேலும் இளையராஜா இந்த பாடலுக்கு  சன்மானம் எதுவும் வாங்காமல், தேசப்பற்றோடு இதனை நான் செய்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார், இது கூடுதல் சிறப்பை அளித்துள்ளது.

ALSO READ | Oo Antava Mama; வைரல் ஆகும் கிலி பால் version வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News