பீகார், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
பீகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இடங்களிளின் ஒரு சில பகுதிகளில் இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், சிக்கிம் மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தானின் கிழக்கு பகுதிகள், மேற்கு வங்கம், ஜார்கண்ட், அசாம் மற்றும் மேகாலாயா ஆகிய பகுதிகளில் கன மழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மஹாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், விதர்பா மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் புயல் போன்ற வானிலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Prayagraj: Streets of the city water-logged after heavy rain lashed the region today. All educational institutes to remain closed tomorrow, in wake of heavy rainfall warning. pic.twitter.com/Jf24MK34Cj
— ANI UP (@ANINewsUP) September 27, 2019
மேலும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.