மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை? வெளியான முக்கிய தகவல்!

கொரோனா தொற்றுநோய் பரவல் தொடங்கிய பிறகு, ​​மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது, அது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 13, 2022, 07:47 PM IST
  • ரயில் கட்டணத்தில் முன்னதாக வழங்கப்பட்ட சலுகை.
  • கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிற வகை பயணிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை.
மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை? வெளியான முக்கிய தகவல்!

மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகை: ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிற வகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும், கோரிக்கைகளுக்கு எழுந்த பிறகு, மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை தொடர்பாக, வயது அளவுகோல் போன்ற விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அரசாங்கம் மாற்றி அமைக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 58 வயது பெண்களுக்கும் 60 வயது ஆண்களுக்கும் இருந்த சலுகைக் கட்டண வசதியை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வழங்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. 

ரயில் கட்டணத்தில் முன்னதாக வழங்கப்பட்ட சலுகை, 2020 மார்ச் மாதத்திற்கு முன், மூத்த குடிமக்களைப் பொறுத்தவரையில், அனைத்து வகுப்புகளிலும் பயணிக்க பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் தள்ளுபடியை ரயில்வே வழங்கியது குறிப்பிடத்தக்கது. ரயில்வேயில் இருந்து இந்த சலுகை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு வயதான பெண்களுக்கு 58 ஆகவும், ஆண்களுக்கு 60 ஆகவும் இருந்தது. ஆனால், கொரோனா காலத்திற்குப் பிறகு, அவர்களுக்கு இருந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

ஆதாரங்கள் மூலம் கிடைத்த தகவல்

இது தொடர்பான வெளியான தகவல்களில், இந்த சலுகைகள் முதியவர்களுக்கு மிகவும்உதவுகின்றன என்பதை அரசு புரிந்துகொண்டுள்ளது என்றும் அதை முற்றிலுமாக அகற்றப் போகிறோம் என்று அரசு ஒருபோதும் கூறவில்லை என்றும், இது குறித்து  பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சலுகைக்கான வயது வரம்புகளை மாற்றி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க ரயில்வே வாரியம் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

2020 முதல் நிறுத்தப்பட்ட சலுகை

2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு முன்பு, மூத்த குடிமக்கள் சலுகை பெறுவதற்கான வயது பெண்களுக்கு 58 மற்றும் அதற்கு மேற்மட்ட வயதுடைய பெண்கள் எனவும், ஆண்களுக்கு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் எனவும் இருந்தது. பெண்கள் 50 சதவீத கட்டண சலுகையும், ஆண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட பிற பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு 40 சதவீத கட்டணம் சலுகை வழங்கப்பட்டது. 

'பிரீமியம் தட்கல்' திட்டம் 

அனைத்து ரயில்களிலும் 'பிரீமியம் தட்கல்' திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். இதன் மூலம், மூத்த குடிமக்களுக்கான சலுகை மற்றும் பிற சலுகைகளால் ஏற்படும் நிதி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News